Breaking News

"Freedom 251"- பணத்தை திரும்பி வழங்குவதாக நிறுவனம் அறிவிப்பு

உலகிலேயே மிக குறைவான விலையில் ஸ்மார்ட்போனை வழங்குகிறது இந்தியாவின் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம்.
Freedom- 251 என்ற பெயரில் வெளியாகும் ஸ்மார்ட்போனுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது.
எனினும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்ததால் முடங்கிய இணையதளம், ஒருநாள் இடைவெளிக்குபின் சரியானது.  இந்நிலையில் இதுகுறித்த நிறுவனம் மக்களை ஏமாற்றுவதாகவும் பரவலாக பேசப்படுகிறது.


இதற்கிடையே பதிவு செய்த நபர்களுக்கு, பணம் செலுத்துவற்கான லிங்க் 48 மணிநேரத்தில் அவர்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையிலும் எவ்வித தகவலும் இல்லை.

இந்நிலையில் ஸ்மார்ட்போன் வாங்க பதிவு செய்திருந்தவர்கள், முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் எனவும், போன் கையில் கிடைக்கும் போது பணம் செலுத்தினால் போதும் (கேஷ் ஆன் டெலிவரி) எனவும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவன தலைவர் அசோக் சத்தா ஒரு செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியிருந்த சுமார் 30,000 பேரின் பணம் திரும்பி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

No comments

Thank you for your comments