Breaking News

நகைச்சுவை நடிகர் குமரி முத்து காலமானார்

சென்னை, பிப்.29:
பிரபல நகைச்சுவை நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் குமரி முத்து சிகிச்சை பலனின்றி இன்று காலை
உயிரிழந்துள்ளார்.

சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற அவர் ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர்.
மேலும், இவர் தி.மு.க. பேச்சாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments