Breaking News

பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டடியதை வலியுறுத்தி காட்பாடி ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரபப்பட்டது

காட்பாடி, பிப்.15:
காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

கடந்த சில மாதங்களாக ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயிலில்களில் மர்ம நபர்கள் சிலர் நகை, பணம் மற்றும் பொருட்களை திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ரயில் பாதுகாப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டாலும் பயணிகளின் அஜாக்ரதை காரணமாக திருட்டு சம்பவங்கள் குறையவில்லை. 

எனவே, பயணிகளின் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் லக்ஷ்மி பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

இவரது உத்தரவின்படி, காவல்துறைத்தலைவர் ராமசுப்பு, காவல்துறை துணைதலைவர் பாஸ்கர், சென்னை கோட்ட எஸ்பி விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் 3 நாள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி காட்பாடி ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. 

ரயில்வே காவல் ஆய்வாளர் வஜ்ஜிரவேலு, உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு தலைமை காவலர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். திரளாக பயணிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments

Thank you for your comments