Breaking News

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த சரத்குமார்? சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபுறம் தேர்தல் உறுதிமொழிகள் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அதிமுக கட்சியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி, தற்போது பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று சென்னை வந்துள்ளார், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிகட்சி ஏ.சி.சண்முகம், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சதக்கத்துல்லா, இந்திய மக்கள் கட்சி நிறுவனர் தேவநாதன் ஆகியோருடன் கூட்டணி தொடர்பாக ஜவடேகர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதனிடையே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ஜவடேகரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனால், பாஜக கூட்டணியில் இணைய சரத்குமார் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Thank you for your comments