10 ஆயிரம் பெண் குழந்தைகளின் வாழ்வை மாற்றப்போகும் வைர வியாபாரி
சூரத், பிப்.25:
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்தார்.
அப்போது பிரதமர் மோடி தனது முழு பெயர் பொறித்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள ”கோட்” அணிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த கோட் ஏலம் விடப்பட்ட போது, குஜராத்தைச் சேர்ந்த வைர
வியாபாரியும், தொழிலதிபருமான லால்ஜிபாய் படேல் என்பவர் ரூ.4.31 கோடிக்கு
அதை ஏலத்தில் எடுத்தார்.
ஆனால் அந்த கோட்டை ஏலத்தில் எடுக்க முயன்று தோற்றுபோன மற்றொரு ரியல்
எஸ்டேட் மற்றும் வைர வியாபாரியான லால்ஜிபாய் பாட்ஷா, 10 ஆயிரம் பெண்
குழந்தைகளுக்காக ரூ.200 கோடி நன்கொடை வழங்கப்போவதாக நேற்று
அறிவித்துள்ளார்.
அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதனை தெரிவித்த அவர்,
வரும் மார்ச் 13-ம் திகதி குஜராத்தின் சூரத் நகரில் இந்த திட்டத்தை
அறிமுகம் செய்து வைக்கப் போவதாக கூறியுள்ளார்.
இதற்காக குஜராத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 10 ஆயிரம்
பெண் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம்
நன்கொடை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் இருக்கும்.
மேலும், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்
என்ற மத்திய அரசின் விழிப்புணர்வு திட்டத்துக்கு, என்னால் முடிந்த
பங்களிப்பாக இந்த தொகையை ஒதுக்கியுள்ளேன் என பேசியுள்ளார்.
No comments
Thank you for your comments