சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 10 அறைகள் தரைமட்டம்- தொழிலாளர்கள் நிலை என்ன?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட
வெடி விபத்தில் 10 அறைகள் இடிந்து தரைமட்டமானது. பணியில் இருந்த
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் என்பதால் தீயணைப்பு
வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வைத்திருந்த
அறைகள் இடிந்து
தரைமட்டமாகியிருப்பதால் பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தரைமட்டமாகியிருப்பதால் பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நாரணபுரம் அருகே உள்ள வி. சொக்கலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான
ஜோனல் பட்டாசு ஆலையில் இன்று 150க்கும் மேற்பட்டோர் வேலை
செய்துகொண்டிருந்தனர். அப்போது ஆலையின் ஒரு பேன்சி ரக பட்டாசுகளை வெடிக்க
வைத்து சோதனை மேற்கொண்டதாக தெரிகிறது.அதில் இருந்து வெளியான நெருப்பு
பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்குள் விழுந்தது. இதில்
அனைத்து பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. அக்கம் பக்கத்தில் உள்ள
அறைகளுக்கும் நெருப்பு பரவியதால் பட்டாசுகள் வெடித்து சுவர்கள் இடிந்து
விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வெடி விபத்து பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி, ஸ்ரீ வில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10க்கும்
மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வெடி விபத்து நடந்த சொக்கலிங்கபுரத்திற்கு
விரைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை
கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால் 10க்கும் மேற்பட்ட
அறைகள் தரைமட்டமாகியுள்ளன. இதில் தொழிற்சாலையின் உள்ளே சிக்கியிருக்கும்
நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்னவானது என்பது பற்றி தகவல்கள்
தெரியவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே தொழிலாளர்கள் நிலை
பற்றி தெரியவரும் என்று அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012ம் ஆண்டு சிவகாசி அருகே முதலிப்பட்டி பட்டாசு ஆலையில்
நிகழ்ந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். முதலிப்பட்டி
பட்டாசு ஆலை விபத்திற்கு பின் பெரியளவில் எந்த விபத்தும் நடக்கவில்லை.
இதற்கு தொழிலாளர்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வே காரணம் என்று கூறப்பட்ட
நிலையில் இன்று நிகழ்ந்துள்ள வெடி விபத்தில் எத்தனை தொழிலாளர்கள் படுகாயம்
அடைந்துள்ளனர் என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரியவரும்.
No comments
Thank you for your comments