அண்ணா பல்கலைக்கழக விடுதியில்
பொறியியல் மாணவி ஒருவர் தற்கொலை
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகள் சண்முக பிரித்தா. இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் பொறியியல் பிரிவில் பி.டெக் இரண்டாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு விடுதியின் மாடிக்கு சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த மாணவிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சண்முக பிரித்தா, கடைசியாக செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக, சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments