Breaking News

பாமாயிலில் ₹600 கோடி ஊழல்!” - தவெக அரசைச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை | அக்டோபர் 05, 2026

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) விநியோகிக்கப்படும் துவரம் பருப்பைக் கடந்த காலங்களைக் காட்டிலும் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்து ₹187 கோடியை மிச்சப்படுத்தியுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

“விலைக் குறைப்புக்குக் காரணம் கழக அரசுதான்!” - உதயநிதி ஸ்டாலின் தெளிவு:

குடிமைப் பொருள் வழங்கல் துறையின் அறிவிப்பு குறித்துத் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும், 

இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.

2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.

இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.

“பாமாயில் கொள்முதலில் ₹600 கோடிக்கு மேல் ஊழல்!”

மேலும், பாமாயில் கொள்முதல் விலையைச் சுட்டிக்காட்டி தவெக அரசு மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்:

  • கழக ஆட்சியில் பாமாயில் விலை: "சென்ற ஆண்டு செப்டம்பரில் லிட்டர் ₹124.90, டிசம்பரில் ₹121.95, கடந்த மார்ச் மாதத்தில் ₹136.95 என குறைந்த விலையில் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டது." 
  • தவெக ஆட்சியில் அதிக விலை: "ஆனால் இந்த ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ₹154.99-க்கும், தற்போது ₹148-க்கும் அதிக விலை கொடுத்துப் பாமாயில் கொள்முதல் செய்துள்ளனர்." 
  • ஊழல் குற்றச்சாட்டு: "கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.."

ஊடகங்களுக்கு வேண்டுகோள்:

"Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?

அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்". 





உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு துவரம் பருப்பு பாமாயில் கொள்முதல் ஊழல் (Udhayanidhi Stalin TVK govt ration toor dhal palm oil procurement controversy 2026)

No comments

Thank you for your comments