“திமுகவின் கடைக்கோடித் தொண்டனின் கால் நகம் கூட அஞ்சாது!” - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளுக்கு மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி!
சென்னை | அக்டோபர் 29, 2026
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவு விவரம்:
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், தவெக அரசை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்:
திசைதிருப்பும் நாடகம்:
"பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதல்வர், மக்களின் கவனத்தையும், ஊடகங்களின் பிரேக்கிங் செய்திகளையும் திசைதிருப்ப 'ரோடு ஷோ' நடத்தலாமா? அல்லது 'ரெய்டு ஷோ' நடத்தலாமா? என யோசித்துக்கொண்டிருக்கிறார்."
வெற்றி வெண்டெட்டா பொலிடிக்ஸ்:
"ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் தவெக எனும் 'TN Branch Washing Machine', திமுக ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்தி வரும் 'Vettri Vendetta Politics' திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்."
இடைத்தேர்தல் ரீல்ஸ் வீடியோ:
"திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான 'ரீல்ஸ் வீடியோக்களை'த் தயாரிக்கவும், முதல்வர் மேடையில் பஞ்ச் டயலாக் என்ற பெயரில் பல மாடுலேஷனில் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு திமுகவின் கடைக்கோடித் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!"
மக்கள் விரோத ஆட்சி:
"சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கும் இந்தத் தவெக ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடே எள்ளி நகையாடுகிறது. திமுகவினருக்கு வாய்ப்பூட்டு போட்டு விடலாம் என நினைக்கிறீர்கள். இனி இன்னும் வேகமாகத் தவெக அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்" என அவர் கொந்தளித்துள்ளார்.
Short English Summary for Readers:
dk"Even a DMK Worker's Toenail Won't Fear These Raids": MK Stalin Strongly Condemns DVAC Raids on KN Nehru
Chennai | October 29, 2026
DMK President and former Chief Minister M.K. Stalin issued a blistering statement on X (formerly Twitter) regarding the ongoing DVAC raids on former minister K.N. Nehru and ex-MLA Nandakumar. Terming the searches as "Vettri Vendetta Politics" executed by the TVK government to divert public attention from law-and-order failures and inflation, Stalin declared that even a low-level DMK worker's toenail would not fear such raids. He asserted that these attempts were aimed at creating "reels videos" for the upcoming Trichy East by-election and vowed that the party would continue to expose the government's shortcomings.
No comments
Thank you for your comments