Breaking News

“காஞ்சிபுரத்தில் கோலாகலமான சமுதாய வளைக்காப்பு!” - 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் துவக்கி வைத்தார்!


 காஞ்சிபுரம்  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சீர்வரிசைகள் வழங்கி, 'சமுதாய வளைக்காப்பு' விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்துத் தாய்மார்களுக்குச் சீர்வரிசைகளை வழங்கினார்.



விழாவின் முக்கிய அம்சங்கள்:

கணக்கெடுப்பும் திட்டமிடலும்: 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலத்துறை அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்ட 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சீர்வரிசையுடன் வளைக்காப்பு நடத்த வேண்டும் என வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமாரின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. 

அதிசயச் சிறப்பு வரவேற்பு: 

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைக்க, மாவட்ட ஆட்சியர் சினேகா முன்னிலை வகித்தார்.

சந்தனம் & வளைக்காப்பு: சமூக நலத்துறை பெண் ஊழியர்கள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவருக்கும் சந்தனம் பூசி, சமுதாய முறைப்படி வளைக்காப்பு நடத்தப்பட்டது.

 

சீர்வரிசை மற்றும் மரக்கன்றுகள்: 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சசினேகா ஆகியோர் இணைந்து கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவருக்கும் பட்டுச்சேலை மற்றும் பல்வேறு சீர்வரிசைகளை வழங்கினர். மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்துத் தாய்மார்களுக்கும் தலா இரண்டு தென்னங்கன்றுகளும், இரண்டு தேக்கு மரக்கன்றுகளும் பரிசாக வழங்கப்பட்டன.

மதிய உணவு விருந்து: 

வளைக்காப்பு நிகழ்ச்சியின் நிறைவாக, அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் கர்ப்பிணித் தாய்மார்களுடன் கீழே அமர்ந்து அவர்களுடன் உற்சாகமாக மதிய உணவை அருந்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர்கள், கர்ப்பிணித் தாய்மார்களின் உறவினர்கள் மற்றும் த.வெ.க. பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments