தவெக-வை தீர்க்கப் போகும் சக்தி அதிமுக தான்!” - ‘ரீல்ஸ் முதல்வர்’ விஜய்யை வறுத்தெடுத்த வி. சோமசுந்தரம்!
காஞ்சிபுரம் | செப்டம்பர் 16, 2026
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் வணிகர் வீதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
.jpg)
உங்கள் ராசிக்கு என்ன பலன்?
இப்பொதுக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ப. மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“சீரியலை விட சட்டசபை தான் நகைச்சுவையா இருக்கு!” - முதல்வர் விஜய் மீது பாயும் விமர்சனம்
பொதுக்கூட்டத்தில் அப்பகுதி மக்களிடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யின் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார்:
- ரீல்ஸ் ஆட்சி: "புரட்சித் தமிழர் எடப்பாடியார் கூறியது போல் விஜய்யின் ஆட்சி ரியல் ஆட்சி அல்ல, வெறும் ரீல்ஸ் ஆட்சி மட்டுமே. ஆட்சி அமைந்து 100 நாட்களுக்கு மேலாகியும் 42 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டதே தவிர, மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டமும் கிடைக்கவில்லை."
- நாடகச் சட்டமன்றம்: "முன்பெல்லாம் பெண்கள் டிவி சீரியலைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது சீரியலை விட சட்டசபையில் நடப்பது நகைச்சுவையாக உள்ளது என்பதற்காகச் சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்."
- மக்களின் ஏமாற்றம்: "எடப்பாடியார் ஆட்சி வந்திருந்தால் 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், ₹2,500 முதியோர் உதவித்தொகை, விவசாயக் கடன் தள்ளுபடி எல்லாம் கிடைத்திருக்கும் எனத் தமிழ்நாட்டு மக்கள் இப்போது வருந்துகிறார்கள்."

“அதிமுக தீர்ந்துபோன கட்சி அல்ல; தவெக-வை தீர்க்கப்போகும் சக்தி!”
முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக-வின் அரசியல் நகர்வுகளைச் சுட்டிக்காட்டி வி. சோமசுந்தரம் ஆவேசமாகப் பேசினார்:
"வரலாற்றுப் பின்னணி தெரியாமல் ரீல்ஸ் முதல்வர் விஜய் காவிரி நீருக்காகச் சட்டமன்றத்தில் புதிய தீர்மானம் கொண்டுவருகிறார். மேட்டூர் அணை கட்டவே 4 கோடி செலவாகாத நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மட்டும் 6 கோடிக்கு மேல் மக்கள் பணத்தைச் செலவழிக்கிறார்."
— வி. சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர்
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக தீர்ந்துபோன கட்சி என்று ரீல்ஸ் முதலமைச்சர் கூறுகிறார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... அதிமுக தீர்ந்துபோன கட்சி அல்ல, தமிழக வெற்றித் கழகத்தை தீர்க்கப் போகும் ஒரே சக்தி! மதுராந்தகம் இடைத்தேர்தலில் இரவும் பகலும் உழைத்து அதிமுக-வின் வெற்றிக் கனியைப் பறிப்போம்" என முழங்கினார்.
முக்கிய நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு
இப்பொதுக்கூட்டத்தில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் மதனந்தபுரம் பழனி, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்டத் துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments