Breaking News

“காஞ்சிபுரத்தில் குரூப்-1 தேர்வு!” - 4,272 பேர் தேர்வு எழுதினர்: மாவட்ட ஆட்சியர் தி. சினேகா நேரில் தீவிர ஆய்வு!


 காஞ்சிபுரம் | செப்டம்பர் 27, 2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-1 (தொகுதி-1) முதல்நிலைத் தேர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப். 27) சுமுகமாக நடைபெற்றது. தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளைக் மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சினேகா, இ.ஆ.ப. நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

பச்சையப்பன் பள்ளியில் ஆட்சியர் நேரில் ஆய்வு!

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு இன்று காலை நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, இ.ஆ.ப., தேர்வு அறைகளின் கட்டமைப்பு, குடிநீர், காற்றோட்டம் மற்றும் கண்காணிப்பு வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  • தேர்வு நேரம்: குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.
  • தேர்வர்கள் வருகைப் பதிவு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 தேர்வு மையங்களில் 18 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வை எழுத 5,277 தேர்வர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில், 4,272 தேர்வர்கள் நேரில் பங்கேற்றுத் தேர்வு எழுதினர். 1,005 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை.

4 அடுக்குக் கண்காணிப்பு & வீடியோ பதிவு பாதுகாப்பு!

குரூப்-1 தேர்வு முறைகேடுகளின்றி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன:

  1. மொபைல் டீம் (Mobile Teams): தேர்வு நடைமுறைகளைக் கண்காணிக்கத் துணை வட்டாட்சியர் தலைமையில் 4 பேர்களைக் கொண்ட 4 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
  2. வருவாய்த் துறை அலுவலர்கள்: 18 தேர்வுக் கூடங்களிலும் தொடர் கண்காணிப்பிற்காக 18 வருவாய்த் துறை ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
  3. கருவூலப் பாதுகாப்பு & வினாத்தாள் பரிமாற்றம்: வினாத்தாள்களைக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பது மற்றும் மையங்களுக்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதை ஒருங்கிணைக்க வட்டாட்சியர் ஒருவர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டார்.
  4. வீடியோ பதிவு & போலீஸ் பாதுகாப்பு: அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாகப் பதிவு செய்ய 18 தேர்வுக் கூடங்களுக்கும் தலா ஒருவர் மற்றும் மாவட்ட கருவூலத்திற்கு ஒருவர் என மொத்தம் 19 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு போலீஸ் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments