Breaking News

“நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு!” - விருத்தாசலத்தில் ஆளுங்கட்சி அராஜகம்: 2 பெண் குழந்தைகளுடன் தாய் கதறல்!

விருத்தாசலம் | செப்டம்பர் 26, 2026

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்திநகர் ஆற்றங்கரைத் தெருவில் நேற்று நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

வீட்டைச் சுத்தம் செய்ததற்காகத் தாக்குதல் & சிறை!

விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்த சுரேஷ் - சுதா தம்பதியினர் தங்களது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தை அண்மையில் சுத்தம் செய்துள்ளனர். இதற்கு ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தைச் (TVK) சேர்ந்த நிர்வாகிகள் சிலர், "ஏண்டா நீ அந்த இடத்தை வாங்கிச் சுத்தம் செய்கிறாய்?" என ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் நிற்காமல், சுரேஷ் மீது புகார் கொடுத்து அவரைச் சிறைக்கும் அனுப்ப வைத்துள்ளனர்.

🔰 நீச சனி பெயர்ச்சி 2027: உங்கள் ராசிக்கு ராஜயோகமா? சோதனை காலமா?
நீச சனி பெயர்ச்சி 2027 ராசி பலன்கள்
🔰 2027 சனி பெயர்ச்சியால்
உங்கள் ராசிக்கு என்ன பலன்?
♈ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்
ராஜயோகம் பெறும் ராசிகள் யார்? யாருக்கு எச்சரிக்கை தேவை? தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் பரிகாரங்களுடன் முழுமையான சனி பெயர்ச்சி பலன்களை அறியுங்கள். 🔮✨

 

நள்ளிரவில் தாய் மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கணவர் சுரேஷ் சிறையில் வாட, அவரது மனைவி சுதா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள், பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீட்டின் முன் மற்றும் பின்புறத்தில் வீசித் தீ வைத்துள்ளனர்.

  • உயிர் தப்பிய குடும்பம்: பயங்கர வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். பொதுமக்களின் விரைவான செயல்பாட்டால், தாயும் இரு பெண் குழந்தைகளும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
  • போலீஸாரின் மெத்தனப் போக்கு: இக்கோரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரை மட்டும் பெயரளவில் கைது செய்துள்ளனர். ஆனால், இதில் தொடர்புடைய ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகளைக் காப்பாற்றக் காவல்துறை முயல்கிறதா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

“என் உயிருக்கு ஆபத்து!” - கதறும் பாதிக்கப்பட்ட பெண்

சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சுதா கண்ணீர் மல்க அளித்த பேட்டியில்:

"என் வீட்டைச் சுத்தம் செய்த ஒரே காரணத்திற்காக என் கணவரை அடித்துச் சிறைக்கு அனுப்பினார்கள். இப்போது என் வீட்டையே கொளுத்தி எங்களையும் உயிரோடு கொல்வதற்குக் சதி திட்டமிட்டுள்ளனர். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை. நாளை என் உயிருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்குத் த.வெ.க நிர்வாகிகளே முழு காரணம்! காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விவரித்தார்.

ஆளுங்கட்சியினரின் இந்த அராஜகச் சம்பவத்தால் விருத்தாசலம் நகரம் முழுவதும் கடும் பதற்றமும் பொதுமக்களிடையே அச்சமும் நிலவி வருகிறது.

No comments

Thank you for your comments