“முதுகுத் தண்டுவடப் பாதிப்பு தினம்!” - காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர் சினேகா!
காஞ்சிபுரம் |
.jpg)
உங்கள் ராசிக்கு என்ன பலன்?
மாற்றுத்திறனாளிகள் & செவிலியர் மாணவிகள் பங்கேற்பு
இப் பேரணியில் தண்டுவடக் காயம் அடைந்தோர் அமைப்பைச் (Spinal Injured Persons Association - SIPA) சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது சக்கர நாற்காலிகளில் கலந்துகொண்டனர்.
மேலும், காஞ்சிபுரம் செவிலியர் மற்றும் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வுப் பேனர்களை ஏந்தியபடி பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
"சாலை விபத்துகளே முதுகுத் தண்டுவடப் பாதிப்பிற்கு முக்கியக் காரணியாக அமைகின்றன. எனவே ஓட்டுநர்களும் பொதுமக்களும் சாலை விதிகளை முழுமையாகக் பின்பற்ற வேண்டும்."
— மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சினேகா
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்திய ஆட்சியர்
பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்கள் அனைவரும் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வாகனங்களை கவனமாக இயக்குவதன் மூலம் தண்டுவடப் பாதிப்பு போன்ற கடுமையான விபத்துச் சிக்கல்களில் இருந்து தங்களையும், தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா. மலர்விழி, செயிண்ட் மேரி கல்லூரி முதல்வர் மேரி டெய்சி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments