வேலூரில் 32-வது கிளையை தொடங்கியது 'கிராண்ட் கான்டினென்ட் ஹோட்டல்ஸ்'!
வேலூர் | செப்டம்பர் 26, 2026
50 நவீன அறைகளுடன் கட்டமைப்பு
வேலூருக்கு வருகை தரும் பல்வேறு தரப்புப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 50 அறைகளுடன் இந்த ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது:
- மருத்துவச் சுற்றுலாப் பயணிகள் (CMC மருத்துவமனைக்கு வருவோர்)
- மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் (VIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு வருவோர்)
- தொழில்முனைவோர்கள் & வர்த்தகப் பயணிகள்
- ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணிகள் (ஸ்ரீபுரம் பொற்கோயில், வேலூர் கோட்டை போன்ற இடங்களுக்கு வருவோர்)
நிறுவனத் தலைவரின் கருத்து
இதுகுறித்து கிராண்ட் கான்டினென்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான ரமேஷ் சிவா தெரிவிக்கையில்:
"எங்களது 32-வது ஹோட்டலை வேலூரில் தொடங்குவதன் மூலம் தென்னிந்தியாவில் எங்களது வர்த்தகத் தடத்தை மேலும் வலுப்படுத்துகிறோம். வர்த்தகம், மருத்துவம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா சார்ந்த முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான சேவையை வழங்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்."
20 நகரங்களில் 2,000+ அறைகள்!
வேலூர் ஹோட்டல் தொடக்கத்தின் மூலம் கிராண்ட் கான்டினென்ட் ஹோட்டல்ஸ் நிறுவனம் தற்போது 20 நகரங்களில் 32 ஹோட்டல்களுடன் 2,000-க்கும் மேற்பட்ட அறைகளைக் (Keys) கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் ஏற்கனவே சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், குர்கான், ஓசூர் மற்றும் செகந்தராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments