அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
சென்னை | செப்டம்பர் 07, 2026
மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய தமிழகச் சட்டப்பேரவையில், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் அனல் பறக்கும் போர்க்களமாக மாறியது.
.jpg)
உங்கள் ராசிக்கு என்ன பலன்?
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் அதிரடிப் பதிலுரை
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியான திமுகவைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.
"திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பே நடக்கும். ஊழல் என்று சொன்னதும் எல்லாரும் பதறிக்கொண்டு எழுந்துவிடுவார்கள். தப்பு செய்தவர்கள், ஊழல் செய்தவர்கள் தான் எப்போதும் ஆதாரம் கேட்டுக்கொண்டிருப்பார்கள். பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் காட்டிய வழியில்தான் தவெகவின் தற்போதைய ஆட்சி நடைபெறுகிறது."
— முதலமைச்சர் விஜய்
மேலும் தனது உரையில், "முறைகேடுகளை மிகச் சரியாக, முறையாகச் செய்தவர்கள் திமுகவினர். 'விஞ்ஞான ஊழல்' என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இதுதான். கரூரில் 'கரூர் கேங்' என்ற பெயரில் பெரிய அளவில் வசூல் வேட்டையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்" என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
திமுக அமளி & வெளிநடப்பு:
முதலமைச்சர் 'கரூர் கேங்' குறித்துப் பேசத் தொடங்கியதும், குறுக்கிட்டுப் பேசத் தங்களுக்கு உடனடியாக வாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் விஜய், "ஆரம்பத்திலிருந்தே பேரவையில் கூச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதையே வழக்கமாக வைத்துள்ளீர்கள், இது மிகப்பெரிய தவறு" எனக் குறிப்பிட்டார.
செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பின், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் பதிலுரைக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
"சட்டமன்றத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக நாங்கள் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கம் முறையான பதிலளிக்காமல், வெறும் பஞ்ச் டயலாக்குகளையும், திசைதிருப்பும் உத்திகளையும் மட்டுமே முதலமைச்சர் விஜய் பதிலாக்கியுள்ளார்."
— உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
“சட்டம் - ஒழுங்கு கேள்விக்கு பதில் எங்கே?” - உதயநிதி சரமாரி கேள்வி
செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்:
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு:
"ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என நாங்கள் கேள்வி எழுப்பினால், அதற்குப் பதிலளிக்காமல் திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளைச் சுட்டிக்காட்டி விவாதத்தைத் திசைதிருப்புகின்றனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்பதே நமது மாறாத நிலைப்பாடு."
ஐபிஎல் போட்டி விவகாரம் & போதைப்பொருள் கடத்தல்:
"ஐபிஎல் போட்டியின் போது மைதான அரங்கில் அமர்ந்து பகிரங்கமாகப் போதைப்பொருள் பயன்படுத்திய ஆளுங்கட்சி அமைச்சர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தரப்பில் நாங்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய பின்னரே, கடந்த மூன்று நாட்களாக அமைச்சர்கள் அவசர அவசரமாகக் களத்திற்குச் சென்று பிரச்சினைகளைத் தீர்க்கும் நாடகத்தில் ஈடுபட்டுள்ளனர்."
“மிசா பற்றிப் பேச முதல்வருக்குத் தகுதி இல்லை!”
சட்டப்பேரவையில் முதலமைச்சர் வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டதற்குப் பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்:
சர்க்காரியா கமிஷன் & மிசா: "சென்னையில் பட்டப்பகலில் இரண்டு கொலைகள் நடந்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சியினரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப் பற்றிப் பேச வாய்ப்பு கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் முதல்வர் 1970-களின் நிகழ்வுகள், சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா (MISA) சட்டத்தைப் பற்றிப் பேசுகிறார். சர்க்காரியா கமிஷனில் தவறுகள் எதுவுமில்லை என அறிக்கையிலேயே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது மிசா சட்டம் குறித்துப் பேசுவதற்கு முதலமைச்சருக்கு எவ்விதத் தகுதியும் கிடையாது."
மக்களின் தீர்ப்பு & நீதிமன்றத் தண்டனை:
"சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகும் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்து, அது நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே தலைவர் யார் என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஆனால் திமுகவின் தலைவர்களோ, முன்னாள் அமைச்சர்களோ இதுவரையிலும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படவில்லை."
“சினிமா காட்சிகளைப் பேசத் தொடங்கினால் தாங்க மாட்டீர்கள்!”
அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் முதலமைச்சரின் பேச்சை விமர்சித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின்:
"அமலாக்கத்துறை (ED) கூறியுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணையில் மட்டுமே உள்ளன; அவை இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், அவற்றை மட்டுமே சட்டப்பேரவையில் படித்துக் காட்டி, தங்களது உண்மையான நிர்வாகக் கோளாறுகளை ஆளுங்கட்சியினர் மறைக்கப் பார்க்கின்றனர்."
"பெண்களைப் பற்றித் தவறாகப் பேசக்கூடாது, இரட்டை அர்த்தத்திலோ அல்லது மூன்று அர்த்தங்களிலோ பேசக்கூடாது என்று நமக்கு உபதேசம் செய்வதற்கு இந்த முதலமைச்சருக்கு எவ்விதத் தகுதியும் கிடையாது. இவர் நடித்த படங்கள், வைத்த காட்சிகள் மற்றும் பாடிய பாடல்கள் பற்றி நாங்கள் பேசத் தொடங்கினால் இவர்களால் அதைத் தாங்கவே முடியாது!"
— உதயநிதி ஸ்டாலின்
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டமன்றப் பதிலுரையும், அதனைத் தொடர்ந்த எதிர்க்கட்சியினரின் இந்த அதிரடி பேட்டியும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments