Breaking News

“25 ஆண்டாக இருளில் வாழும் மக்கள்!” - காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் மின் இணைப்பு, பட்டா கோரி ஆட்சியரிடம் மனு!

காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 10, 2026

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு, பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் திருவேகம்பன் பகுதியில் வசித்து வரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக மின்சார வசதி மற்றும் வீட்டுமனை பட்டா இன்றி இருளில் தவித்து வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 எதிரே உள்ள மாட்டுக்கொட்டகைக்கு மின்சாரம்... குடியிருக்கும் வீடுகளுக்கு இல்லை!

பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அம் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

  • 25 ஆண்டு கால இருள்: கடந்த 25 ஆண்டுகளாகப் பட்டாவும், மின் இணைப்பும் இன்றி வீடுகளில் சிமினி விளக்கின் வெளிச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
  • அடிப்படை வசதிகள் இருந்தும் புறக்கணிப்பு: இப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு முறையாக வீட்டு வரிகளைச் செலுத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாகத் தெருவிளக்கு வசதி மட்டுமே அமைத்துத் தரப்பட்டுள்ளது.
  • அதிர்ச்சி அளிக்கும் நிலை: இவர்களது வீடுகளுக்கு எதிரே உள்ள சில வீடுகளுக்கும், மாட்டு கொட்டகைகளுக்கும், ஏன் கார் நிறுத்தும் ஷெட்டுகளுக்குக் கூட மின்சார வசதி தடையின்றி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மனிதர்கள் குடியிருக்கும் இந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மட்டும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
  • பாதிக்கப்படும் குழந்தைகள்: மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பள்ளிச் செல்லும் குழந்தைகள் சிமினி விளக்கின் வெளிச்சத்திலேயே படிக்கும் அவலநிலை நீடிக்கிறது. இதனால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை:

"எங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 25 ஆண்டு கால எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று உடனடியாக மின் இணைப்பும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் கண்ணீர்மல்கக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

25 ஆண்டுகளாகத் தொடரும் இச்சமூகப் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் விரைந்து தீர்வு காணுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Thank you for your comments