Breaking News

“அரசு ITI நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு!” - மாதம்தோறும் உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி: காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா அறிவிப்பு!


 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 07, 2026

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை வரும் ஆகஸ்ட் 14, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி.சினேகா, இ.ஆ.ப. அவர்கள் அறிவித்துள்ளார்.

ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் காஞ்சிபுரம், ஒரகடம் மற்றும் சாலவாக்கத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ-களில் நேரடி சேர்க்கை மூலம் சேர்ந்து பயன் பெறலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்கள் & தொழிற்பிரிவுகள் (Courses Offered):

1. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், காஞ்சிபுரம்:

  • Industrial Robotics Digital Manufacturing Technician (1 ஆண்டு)
  • Advanced CNC Machining Technician (2 ஆண்டுகள்)
  • Computer Aided Manufacturing Programmer (1 ஆண்டு)
  • Technician Mechatronics (2 ஆண்டுகள்)
  • Cosmetology / அழகுசாதனவியல் (1 ஆண்டு)

2. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம்:

  • Mechanic Motor Vehicle - SCVT (2 ஆண்டுகள்)
  • Electronics Mechanic - SCVT (2 ஆண்டுகள்)
  • Mechanic Electric Vehicle - NCVT (2 ஆண்டுகள்)
  • Advanced CNC Machining Technician - NCVT (2 ஆண்டுகள்)
  • Manufacturing Process Control and Automation - NCVT (1 ஆண்டு)
  • Industrial Robotics and Digital Manufacturing Technician (1 ஆண்டு)

3. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாலவாக்கம்:

  • Mechanic Electric Vehicle (2 ஆண்டுகள்)
  • Industrial Internet of Things - IIOT Technician (2 ஆண்டுகள்)
  • Mechanic Lens & Prism Grinding (1 ஆண்டு)
  • Driver cum Mechanic - LMV (6 மாதங்கள்)

அரசு வழங்கும் இலவசச் சலுகைகள் & உதவித்தொகை:

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதோடு, கீழ்க்கண்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன:

  1. இலவசப் பொருட்கள்: மிதிவண்டி, காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், சீருடைகள் மற்றும் தையற்கூலி.
  2. மாதாந்திர உதவித்தொகை: பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.750/- உதவித்தொகை.
  3. புதுமைப் பெண் திட்டம்: அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு மாதம் ரூ.1,000/- நிதி உதவி.
  4. தமிழ்ப் புதல்வன் திட்டம்: அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- நிதி உதவி.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

  • அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், காஞ்சிபுரம்: 9659452204
  • அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம்: 9715472686
  • அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாலவாக்கம்: 9840893558



No comments

Thank you for your comments