Breaking News

“முன்னாள் அவைத் தலைவர் பொன்மொழி நினைவு நாள்” - காஞ்சிபுரம் மாநகரக் திமுக அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை!

காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 31, 2026

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக முன்னாள் அவைத் தலைவரான தெய்வத்திரு சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (31.08.2026) கடைப்பிடிக்கப்பட்டது. 

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

இதனை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணியளவில் காஞ்சிபுரம் மாநகர திமுக கட்சி அலுவலகக் கட்டிடத்தில் அவரது உருவப்படத்திற்குச் சிறப்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை:

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார் தலைமையில், கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து மறைந்த முன்னோடி சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவித் தங்களது வீரவணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினர்.

நிகழ்வில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

இந்நினைவஞ்சலி நிகழ்வில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்:

  • மாநகரச் செயலாளர்: சி.கே.வி. தமிழ்ச்செல்வன்.
  • மாநில நிர்வாகி: வர்த்தகர் அணி துணைச் செயலாளர் வி.எஸ். ராமகிருஷ்ணன்.
  • மாநகர நிர்வாகிகள்: கே.ஏ. செங்குட்டுவன், வ. ஜெகன்நாதன்.
  • கழக நிர்வாகிகள்: இரா. இளஞ்செழியன், எஸ். மாரிமுத்து, எஸ்.வி. ரமேஷ், நாத்திகம் நாகராசன், ஜி. செல்வம், வ. மலர்மன்னன், சி.எஸ். விஜயகுமார், அண்ணாமலை, குமரவேல் எம்.சி., ஜாபர், சி. மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

No comments

Thank you for your comments