காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 438 மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சினேகா உத்தரவு!
காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 03, 2026
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் பங்கேற்று, வருகை தந்திருந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்கள்.
438 மனுக்கள் வரவேற்பு & ஆட்சியரின் கண்டிப்பான உத்தரவு:
இன்றைய கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின்சாரத் துறை, குடிநீர் வசதி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராமப் பொதுப் பிரச்சினைகள் மற்றும் வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் அளித்த 438 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்:
பெறப்பட்ட மனுக்களை உடனடியாகச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த ஆட்சியர், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான உரிய காரணங்களை மனுதாரர்களுக்குத் தெளிவுபடுத்தி வழங்கிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.6.32 லட்சத்தில் கற்றல் உபகரணங்கள்:
கூட்டத்தின் தொடர்ச்சியாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட கனிமவள அறக்கட்டளையின் (DMF) சார்பில் சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.
- கற்பித்தல் கற்றல் பொருட்கள்: மாவட்டத்தில் உள்ள 9 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், ரூ.6,32,412/- மதிப்பிலான நவீன கற்பித்தல் கற்றல் பொருட்களை (Teaching Learning Materials) மாவட்ட ஆட்சியர் தி. சினேகா ஐ.ஏ.எஸ்., அவர்கள் சிறப்புப் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கிப் பாராட்டினார்.
பங்கேற்ற முக்கிய அரசு அலுவலர்கள்:
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) திருமதி கெ.ரா. திவ்யஸ்ரீ, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ஆஷிக் அலி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு. பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி ர. விஜயலட்சுமி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.



No comments
Thank you for your comments