“பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” - ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
சென்னை | ஆகஸ்ட் 24, 2026
🔮 மேஷம் முதல் மீனம் வரை வார ராசி பலன்கள்

🔥 இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்?
யாருக்கு எச்சரிக்கை தேவை?
யாருக்கு எச்சரிக்கை தேவை?
📅 ஆகஸ்ட் 24–30, 2026
கூட்டம் தொடங்கியதும், சமீபத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் (அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்):
வளைகுடா போரினால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை உயர்வை ஈடுகட்டவும், குடும்பத் தலைவிகளின் நிதிச்சுமையைக் குறைக்கவும் புதிய நலத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது:
- இலவச சிலிண்டர்: ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டொன்றுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
- பொங்கல் முதல் அமல்: இத்திட்டம் வரவிருக்கும் பொங்கல் திருநாள் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
- நேரடி பணப்பரிமாற்றம் (DBT): சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1.30 கோடி குடும்பங்கள் பயனடைவர்.
2. பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராம மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
- விவசாயிகள் நலன்: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைந்தால் பெருமளவில் விளைநிலங்களும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதை நேரில் சென்று கேட்டறிந்ததாகவும், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி இத்திட்டம் கைவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
- மாற்று இடம் தேர்வு: விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய பாதிப்பு இல்லாத வகையில் மாற்று இடங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், துறை சார்ந்த வல்லுநர்களின் ஆய்வுக்குப் பின் புதிய இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
- மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கம் (Terminal 5): புதிய விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும் வரை பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.20 மில்லியன் பயணிகளைக்ையாளும் வகையில் ‘டர்மினல் 5’ (Terminal 5) அமைக்கப்படும். தற்போது நடைபெற்று வரும் ‘டர்மினல் 3’ பணிகளுடன் சேர்த்து, சென்னை விமான நிலையத்தின் திறன் ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகளாக உயர்த்தப்படும்.
.jpg)

No comments
Thank you for your comments