Breaking News

"நீதிமன்றத்திடம் குட்டுப்படும் ஆட்சியாளர்கள் மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி!" - சிறைச் சந்திப்பிற்கு பின் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

 சென்னை | ஜூலை 27, 2026

"விமர்சனத்துக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி" என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

🕉️ சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2026:
மீனத்தில் வக்ரமாகும் சனி பகவான்!

உச்ச குருவின் பார்வையால் குவியப்போகும் அசுர நற்பலன்கள்! உங்க ராசிக்கு என்ன பலன்? - ஆடிமாதம் சூரி+குரு சேர்க்கை

 பாளையங்கோட்டை சிறைச் சந்திப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு:

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திக்குளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த பிறகு, தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறையில் நலம் விசாரிப்பு:

"சர்வாதிகார 'சோஃபா மாடல்' அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம். சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கட்சி மற்றும் மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள மார்க்கண்டேயனிடம் நலம் விசாரித்தோம்.

அவரின் விடுதலைக்காகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.

அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்:

மிசா மற்றும் எமர்ஜென்சியையே நேரடியாகப் பார்த்த வரலாறு கொண்டது திமுக. தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் 'சோஃபா' அரசின் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் திமுகவின் கடைக்கோடித் தொண்டர்கள் கூட ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.

மக்கள் மன்றத்தில் சரிவு உறுதி:

அரசியல் விமர்சனத்துக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், விரைவில் மக்கள் மன்றத்திலும் பெரும் சரிவைச் சந்திப்பது உறுதி!"

அரசியல் களத்தில் அதிகரிக்கும் காரசார விவாதம்:

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்யை மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் திமுக தலைவர்கள் அடுத்தடுத்துச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் 'தவெக' அரசைக் கடுமையாக விமரிசித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த எக்ஸ் பதிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments