🔥 வேலூரில் ரகசியமாய் நடக்கும் ‘பெட்டி’ அரசியல்! - மேயருக்கு ரூ.2 கோடி.. கவுன்சிலருக்கு ரூ.20 லட்சம்! | தவெக-வில் தொடங்கிய உள்ளாட்சித் தேர்தல் ‘ஏலம்’!
வேலூர், ஜூலை 14-
![]() |
| பொதுச்செயலாளர் என். ஆனந்த் |
விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தங்களின் ரத்தமும் சதையுமாய் வளர்த்து, விஜய்யை தமிழகத்தின் முதன்மை அரசியல் சக்தியாக மாற்றப் பல ஆண்டுகள் உழைத்த அடிமட்டத் தொண்டர்கள் இன்று ஓரங்கட்டப்பட்டு அவமானத்தில் நிற்க, நேற்று வந்தவர்கள் எல்லாம் ‘பெட்டி வசூலில்’ ஆட்டம் போட்டு வருவதுதான் தொண்டர்களின் தற்போதைய குமுறல்.
வேலூர் தொகுதி: தொழிலதிபர்களுடன் பார்ட்டி.. திராவிட கட்சிகளை மிஞ்சிய வினோத் கண்ணன்!
மாநகரமே அதிரும் அளவுக்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். எம். வினோத் கண்ணன் மீதான புகார்கள் எழுந்துள்ளன.
ரகசியப் பார்ட்டி பெட்டி அரசியல்
மக்கள் பணியை முற்றிலுமாக மறந்துவிட்டு, வேலூரில் உள்ள முன்னணி தொழிலதிபர்களுடன் சொகுசுப் பார்ட்டிகளில் பங்கேற்பது, அங்கு வைத்து ‘பெட்டி வசூலை’ அரங்கேற்றுவது என இவரது ஆட்டம் வரம்பு மீறிச் சென்று கொண்டிருக்கிறது. “திராவிட கட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு தவெக சட்டமன்ற உறுப்பினரின் பெட்டி அரசியல் உள்ளது” என்று அரசியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விதிமீறல்களுக்கு ஆதரவு
தொழிலதிபர்களின் தொழில்முறை விதிமீறல்களுக்குச் சட்டமன்ற உறுப்பினராகத் துணையாக நிற்பதாக வாக்களித்து, அதற்குப் பிரதியுபகாரமாகப் பல கோடிகளைச் சுருட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் வர்த்தகம்: இப்போதே தொடங்கிய கோடி ரூபாய் பேரம்!
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து வேலூர் மாவட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போதே தங்களது தனி அரசியல் ராஜாங்கத்தைத் தொடங்கிவிட்டனர். தலைமைக்குத் தெரியாமல் உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடும் அவலம் அரங்கேறி வருகிறது.
அதுமட்டுமின்றி இவர்கள் ரகசிய குழுவாக இணைந்து உள்ளாட்சி தேர்தல் சீட் பங்கீடு என செயல்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் உத்தேச விலைப்பட்டியல்:
💰 மேயர் பதவிக்கு: ₹.2 கோடி💰 கவுன்சிலர் பதவிக்கு: ₹. 20 லட்சம்
“திராவிட கட்சிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் பேசி வருகிறார்கள்” என உள்ளூர் அரசியல் ஆர்வலர்கள் அங்கலாய்க்கின்றனர்.
கே.வி. குப்பம் தென்றல்: “தலைமைக்கு ஒன்றும் தெரியாது” என கொக்கரிப்பு!
இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த கே.வி. குப்பம் தென்றல், தற்போது ஒட்டுமொத்தப் பகுதியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு தழுவிய டெண்டர் பேரம்: “தமிழ்நாடு முழுவதும் உங்களுக்கு டெண்டர் எடுத்துத் தருகிறேன், அதற்கு முக்கிய நிர்வாகிகளுக்குப் பல கோடி கொடுக்க வேண்டும்“ என்று கூறி பலரிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசி வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தல் வியாபாரம்
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து, “நீதான் கவுன்சிலர், நீதான் சேர்மன்” என்று ஆசை வார்த்தை கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வசூலில் இறங்கியுள்ளார்.
தலைமையை அவமதித்தல்
எல்லாவற்றிற்கும் மேலாக, “கட்சித் தலைமைக்கும், பொதுச்செயலாள ருக்கும் ஒன்றும் தெரியாது; நான் சொல்வதைக் கேட்டுத்தான் அவர்கள் நடக்கிறார்கள்” என்று பொறுப்பில்லாமல் பேசி வருவது கட்சி வட்டாரங்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் உலா
தொகுதியில் மக்களைச் சந்திக்காமல், அமைச்சராக வேண்டும் என்ற நோக்கில் பல அமைச்சர்களிடம் தூது விட்டுக்கொண்டு சென்னையிலேயே உலா வருகிறார். தட்டிக்கேட்கும் பழைய உழைத்த தொண்டர்களை “உன்னைத் தொலைத்து விடுவேன்” என மிரட்டுவதாகவும் தொகுதி மக்கள் வருத்தப்படுகிறார்கள்.
காட்பாடி சுதாகர்: வி.ஐ.பி கலாச்சாரமும்!
எட்டு மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த டாக்டர் சுதாகர், காட்பாடி பகுதியில் தனது ஆட்டத்தைத் துவங்கியுள்ளார்.
சமூகப் பாகுபாடு - டெண்டர்
காட்பாடி டெண்டர் விஷயங்களில் பல கோடி ரூபாய் பேரம் பேசுவதோடு மட்டுமல்லாமல், “என்னுடைய சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் டெண்டர் வழங்கப்படும், இதைப் பல அமைச்சர்களிடம் பேசி முடித்துவிட்டேன்” என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்.
நிர்வாகிகளுக்கு ஏமாற்றம்: கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகளிடம் சிரித்துப் பேசிக்கொண்டே, “உனக்குத்தான் சீட், உனக்குத்தான் பதவி” என்று ‘அல்வா’ கொடுத்து நாடகமாடி வருவதாக உள்ளூர் நிர்வாகிகள் கொதிக்கின்றனர்.
குடியாத்தம் சிந்துவின் ‘தனி ராஜாங்கம்’ - கட்சித் துண்டுக்குத் தடை!
தவெக-வில் இணைந்து குறுகிய காலத்திலேயே சட்டமன்ற உறுப்பினரான குடியாத்தம் சிந்து, தற்போது தொகுதியில் ஒரு ‘தனி ராஜாங்கம்’ நடத்தி வருவதாகப் புகார்கள் வெடித்துள்ளன. கழகத்தில் உள்ள அடிமட்ட உறுப்பினர்களையோ அல்லது பொறுப்பாளர்களையோ மதிக்காமல், தான் தோன்றித் தனமாக எல்லோரையும் ஒருமையில் பேசி அவமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
“நான் சொல்வது மட்டும்தான் இங்கு நடக்கணும்“ என்ற கர்வத்தோடு செயல்படும் இவர், “யாரும் என்னுடைய அலுவலகத்திற்குள் கழகத் துண்டு அணிந்து வரக்கூடாது” என்று மறைமுகமாக உத்தரவிட்டு, தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியில் பெரும் புலம்பலை ஏற்படுத்தியுள்ளார். ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சியும் விசுவாசமும் அதன் அடையாளமான கட்சித் துண்டில்தான் அடங்கியுள்ளது; தொண்டர்களுக்கான ஆகச்சிறந்த மரியாதையும் அதுவே. ஆனால், எம்.எல்.ஏ சிந்துவோ கட்சியின் அடையாளத்தையே அழிக்கப் பாடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து நியாயம் கேட்கும் கட்சிப் பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் நோக்கி, “உன்னை கட்சியிலிருந்து தூக்கிவிடுவேன்; தலைமைக்கு உன்னைப் பற்றிப் புகார் மனு அனுப்பினால் உடனே உன்னை நீக்கிவிடுவார்கள்” என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருகிறார். கட்சி மீது எவ்விதப் பற்றோ, அதன் வளர்ச்சி குறித்த சிந்தனையோ இல்லாமல், யாரும் தவெக-வின் அடையாளமாக மாறிவிடக் கூடாது என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருகிறார். தொண்டர்களை இப்படி மிரட்டி அவமதிப்பதோடு நிறுத்தாமல், தனது அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி ஒரு தனி பாணியில் அசுர வேக ‘வசூல் வேட்டையில்’ இறங்கியுள்ளார். விஜய்யின் தூய்மையான கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்படும் இவரது இந்த அராஜகப் போக்கால், தற்போது ஒட்டுமொத்தக் குடியாத்தமே குமுறிக் கொண்டிருக்கிறது.
குறுகிய கால வரவுகளும், குமுறும் தொண்டர்களும்!
கடந்த ஆண்டு கட்சியில் இணைந்த வேலூர் வினோத் கண்ணன், அண்மையில் வந்த குடியாத்தம் சிந்து போன்ற புதிய வரவுகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற தங்களின் அதிகாரப் பலத்தை வைத்துக்கொண்டு, பல ஆண்டுகளாக உழைத்த விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்களைத் துச்சமாக மதிப்பது தவெக-விற்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் அதிபர்களுடன் பார்ட்டி கொண்டாட்டங்கள், ரகசியப் பெட்டி வசூல்கள் என இவர்களின் வசூல் வேட்டை ஊரறிந்த உண்மையாக மாறியுள்ளது.
அதிகாரக் குவியல்
வேலூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரத்தைக் கூர்ந்து கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள் மற்றும் கட்சியின் விசுவாசிகள் முன்வைக்கும் மிக முக்கிய வாதம்: “கட்சிப் பதவியும், மக்கள் பணியும் தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும்“ என்பதுதான்.
ஒரு ஜனநாயகக் கட்சியும், அது அமைக்கும் ஆட்சியும் நீண்ட காலத்திற்குக் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டுமானால், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) மற்றும் அமைச்சர்களுக்குக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளை வழங்கக் கூடாது.
அதிகாரக் குவியல் தடுக்கப்படும்
ஒரே நபரிடம் சட்டமன்ற உறுப்பினர் பதவியும், மாவட்டச் செயலாளர் அல்லது மாநில அளவிலான கட்சிப் பதவியும் குவியும்போது, அங்கு சர்வாதிகாரப் போக்கு தலைதூக்குகிறது. வேலூரில் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் பணியைக் கவனிக்க வேண்டிய எம்.எல்.ஏ-க்கள், தங்களின் அதிகார பலத்தைப் பயன்படுத்தி கட்சிப் பதவிகளையும் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்ளக் காய் நகர்த்தி வருகின்றனர்.
ஊழல் அடியோடு அறுக்கப்படும்
மக்கள் பணியும் கட்சிப் பதவியும் தனித்தனியாக இருக்கும்போதுதான் ஒருவரை ஒருவர் கண்காணிக்க முடியும். எம்.எல்.ஏ-க்கள் செய்யும் தவறுகளைக் கட்சித் தலைமைக்குச் சுட்டிக்காட்டும் அதிகாரம் கட்சி நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டும். ஆனால், எம்.எல்.ஏ-க்களே கட்சிப் பதவிகளையும் பேரம்பேசி வாங்கத் துவங்கினால், அங்கே தட்டிக்கேட்க ஆள் இல்லாமல் ஊழல் மலிந்துவிடும்.
கட்டுக்கோப்பான கட்டமைப்பு:
பல ஆண்டுகளாக உழைத்த விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்களுக்குக் கட்சிப் பொறுப்புகளையும், தேர்தலில் வென்றவர்களுக்கு மக்கள் பணிகளையும் பிரித்து வழங்கினால் மட்டுமே கட்சிக்குள் சமநிலை இருக்கும். இதுவே அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பிற்குத் தரும் அங்கீகாரமாகவும் அமையும்.
நிருபரின் பார்வை
தலைவர் விஜய்யின் தூய்மையான அரசியல் கனவுக்கு, வேலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், புதிய நிர்வாகிகளும் ‘கொள்ளை கும்பலாக’ மாறி வேட்டு வைத்து வருகின்றனர். இந்த ஆரம்பகால ஊழல் வேட்டையும், தன்னிச்சையான போக்கும் தவெக அரசுக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய அவமானத்தைத் தேடித்தருவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மக்கள் பணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்சியில் மீண்டும் பொறுப்புகள் வழங்கக் கூடாது என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும். பொதுச்செயலாளரையே மதிக்காமல் கொக்கரிக்கும் இந்த கும்பல் மீது கட்சித் தலைமை உடனடியாகத் தனிப்படை அமைத்து விசாரித்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலூர் மாவட்டத்தில் தவெக-வின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
.jpg)

%20-%20Election%202026%20tvk-41.jpg)
%20-%20Election%202026%20tvk-38.jpg)

No comments
Thank you for your comments