Breaking News

உலகளாவிய முதலீட்டு பாதுகாப்பு பட்டியல்: முதலிடத்தில் சுவிட்சர்லாந்து... 104-வது இடத்திற்குப் பின்தங்கியது இந்தியா!

புதுடெல்லி | ஜூலை 05, 2026

உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்களின் மூலதனத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலை லண்டனைச் சேர்ந்த 'ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'ஆல்பா ஜியோ' என்ற உலகளாவிய தரவு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த 'உலகளாவிய முதலீட்டு அபாயம் மற்றும் பின்னடைவு குறியீடு - 2026' பட்டியலில் இந்தியா 104-வது இடத்திற்குப் பின்தங்கியுள்ளது.

பொதுவாக முதலீட்டின் லாபத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், ஒரு நாடு பொருளாதார அதிர்வுகளில் இருந்து எவ்வளவு வேகமாக மீண்டு வந்து முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாக்கிறது என்ற திறனின் அடிப்படையில் இந்த தரவரிசை கணக்கிடப்பட்டுள்ளது.

எந்த அடிப்படையில் இந்த மதிப்பீடு?

ஒரு நாட்டின் முதலீட்டுப் பாதுகாப்பைத் தீர்மானிக்க 100 புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் 5 முக்கிய காரணிகள் ஆராயப்பட்டன:

  • அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகம்.
  • பொருளாதார நெகிழ்வுத்தன்மை (Economic Resilience).
  • நாட்டின் பணமதிப்பு மற்றும் அதன் பலம்.
  • அரசாங்கத்தின் நிதிக்கொள்கைகள்.
  • புவிசார் அரசியல் பாதுகாப்பு (Geopolitical Safety).

டாப் 10-ல் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் - இந்தியாவின் நிலை என்ன?

  • சுவிட்சர்லாந்து முதலிடம்: உலகிலேயே முதலீட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக சுவிட்சர்லாந்து (88.4 புள்ளிகள்) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டென்மார்க், நார்வே, சிங்கப்பூர் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் 9 இடங்களை ஐரோப்பிய நாடுகளே ஆக்கிரமித்துள்ளன.
  • பின்னடைவில் அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவே இப்பட்டியலில் 73 புள்ளிகளுடன் 24-வது இடத்தில்தான் உள்ளது.
  • 104-வது இடத்தில் இந்தியா: இந்தியா 54.4 புள்ளிகளுடன் 104-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

"இந்தியாவில் நிலவும் பணவீக்க சவால்கள், பண மதிப்பில் ஏற்படும் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் மற்றும் சில ஒழுங்குமுறை-சட்ட நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதம் போன்ற காரணிகளால் முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளதாக இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது."



உலகளாவிய முதலீட்டு பாதுகாப்பு நாடுகள் பட்டியல் (Global Investment Risk and Resilience Index 2026 Switzerland tops India ranks 104th Henley Partners Alpha Geo) 

No comments

Thank you for your comments