Breaking News

ஓணம் பண்டிகை 2026: சென்னையிலிருந்து மங்களூரு, கொல்லம், திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள்! நாளை முதல் முன்பதிவு துவக்கம்!



சென்னை | ஜூலை 08, 2026

கேரள மக்களின் மிக முக்கிய பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இந்த ஓணம் பண்டிகை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகச் சென்னையிலிருந்து மங்களூரு, கொல்லம், திருவனந்தபுரத்திற்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1. மங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06126 / 06125):

மங்களூரு டூ சென்னை (06126): ஜூலை 13, 20, 27 மற்றும் ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை டூ மங்களூரு (06125): ஜூலை 14, 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் செவ்வாய்கிழமைகளில் மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:40 மணிக்கு மங்களூருவைச் சென்றடையும்.

வழித்தடம்: 22 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.

2. சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06119):

சென்னை டூ கொல்லம் (06119): ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் mமதியம் 3:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:20 மணிக்கு கொல்லத்தைச் சென்றடையும்.

கொல்லம் டூ சென்னை: ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் காலை 10:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3:30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

வழித்தடம்: இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாகச் செல்லும்.

3. திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06110 / 06109):

திருவனந்தபுரம் டூ தாம்பரம் (06110): ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

தாம்பரம் டூ திருவனந்தபுரம் (06109): ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:15 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

வழித்தடம்: 22 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.

📢 நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு!

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு நாளை (ஜூலை 9, வியாழக்கிழமை) காலை 8:00 மணிக்குத் தொடங்குகிறது. பயணிகள் IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகத் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments