தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்
சென்னை | ஜூலை 13, 2026
3 ஆண்டுகள் பதவிக் காலம் – அரசாணை வெளியீடு:
இதுதொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது:
“தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக ஏ.லயோலா மணியை அரசு முறைப்படி நியமித்துள்ளது. இப்பதவியில் அவர் 3 ஆண்டுகள் நீடிப்பார். அவரது நியமனம் தொடர்பான இதர விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாகப் பின்னர் வெளியிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் ஐ.லியோனிக்கு மாற்றாக லயோலா மணி:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை நவீன முறையில் அச்சடித்து, மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி விநியோகிக்கும் உன்னதப் பணியைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்பனை செய்யும் பணிகளையும் இந்தத் துறை கண்காணித்து வருகிறது.
கடந்த திமுக ஆட்சியின்போது, ஆசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் இக்கழகத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்தார். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய தலைவராகத் தவெகவின் முக்கியப் பேச்சாளரான லயோலா மணியை நியமித்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி (Loyola Mani appointed Chairman Tamil Nadu Textbook and Educational Services Corporation CM Joseph Vijay school education department secretary Chandramohan minister Rajmohan TVK 2026)
No comments
Thank you for your comments