Breaking News

காஞ்சிபுரத்தில் இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு! 4 மையங்களில் 1,077 பேர் எழுதுகின்றனர் - ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!




 காஞ்சிபுரம் | ஜூலை 04, 2026

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (TET - Teacher Eligibility Test) தாள் ஒன்று இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 1,077 தேர்வர்கள் இந்தத் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் விநியோகம்:

தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருக்கவும், தேர்வு நெறிமுறைகளைப் பின்பற்றவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தேர்வு மையங்களுக்கும் தேவையான வினாத்தாள்கள் அனைத்தும், ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

 


மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு ஏற்பாடுகள்:

இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதுவதற்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 35 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் இன்று தேர்வு எழுதுகின்றனர்.
  • எழுத முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக 3 ஸ்கிரைப் (Scribe - உதவியாளர்கள்) தேர்வு எழுத சிறப்பு அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

"தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் தேர்வர்களிடம் தேர்வு நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கினர். மேலும், முறைகேடுகளைத் தவிர்த்து தேர்வில் அனைவரும் வெற்றி பெறத் தங்களது வாழ்த்துகளையும்த் தெரிவித்துக் கொண்டனர்."

உயரதிகாரிகள் நேரில் அதிரடி ஆய்வு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு சுமுகமாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய, மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) நித்யஸ்ரீ மற்றும் முதன்மை கல்வி அலுவலர் (CEO) நளினி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு அறைகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் சரிபார்த்தனர்.



No comments

Thank you for your comments