Breaking News

கலைஞர் நூற்றாண்டு விழா: காஞ்சிபுரத்தில் ரூ.4 லட்சத்தில் சிசிடிவி கேமராக்கள்! திறந்து வைத்தார் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வம் எம்.பி!

 காஞ்சிபுரம், ஜூலை 2: 

காஞ்சிபுரம் மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கிலும் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் ப.சுரேஷ் ஏற்பாட்டில், சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ரூ.4 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சி 30 மற்றும் 34-வது வார்டுக்கு உட்பட்ட அமுதபடி தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் பாதுகாப்பிற்காக இந்த அதிநவீன சிசிடிவி கேமராக்கள் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து நிறுவப்பட்டுள்ளன.

மாநகராட்சியின் இரண்டாவது மண்டல குழு தலைவர் எஸ்.சந்துரு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, 34-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி பணி குழு உறுப்பினருமான ப.சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

திமுக முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

இவ்விழாவில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் க.செல்வம், மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, ரிப்பனை வெட்டி சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.

விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்

இப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அமுதபடி தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இனி சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பது எளிதாகும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தெற்கு மாவட்ட மற்றும் மாநகர திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அமுதபடி தெரு பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments