Breaking News

“ஒரே குண்டு வீசியிருந்தா ஈரான் தலைவர்கள் காலி!” - காமேனி இறுதிச்சடங்கு குறித்து டொனால்டு ட்ரம்ப் பேசிய சர்ச்சை பேச்சு!

 வாஷிங்டன் | ஜூலை 05, 2026

ஈரானின் முன்னாள் ஆன்மீக உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வின் போது, அந்நாட்டின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களையும் ஒரே குண்டில் வீழ்த்தியிருக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.



வாஷிங்டனில் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் உடனான தற்போதைய ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மற்றும் காமேனியின் இறுதிச்சடங்கு குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

"பேச்சுவார்த்தை நடத்த ஆள் இருக்காது" - ட்ரம்பின் அதிரடி:

ஈரானின் தற்போதைய சூழலைக் குறித்து டொனால்டு ட்ரம்ப் பேசியதாவது:

"தெஹ்ரானில் அயதுல்லா காமேனிக்கு பிரம்மாண்ட இறுதிச் சடங்கு நடக்கும் போது ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். ராணுவ ரீதியாக அது எங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. நான் நினைத்திருந்தால் ஒரே ஒரு குண்டை வீசி அனைவரையும் ஒட்டுமொத்தமாக வீழ்த்தியிருக்க முடியும். ஆனால், நாங்கள் அதைச் செய்யவில்லை; அப்படிச் செய்தால் அப்புறம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கே ஆள் இல்லாமல் போய்விடும்."

மேலும், பெரும்பாலான ஈரானியர்கள் காமேனியை எதிர்த்ததாகவும், அங்கு அஞ்சலி செலுத்த கூடியுள்ள பெருந்திரளான மக்களின் கண்ணீர் போலியானது என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் தலைவர்கள் கெஞ்சிக் கொண்டிருப்பதாகவும், இறுதிச் சடங்குகள் முடியும் வரை ஒரு வாரத்திற்குப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"உங்களுக்கு நாகரிகம் இல்லை" - ஈரான் தூதரகம் பதிலடி:

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஈரான் - அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே, ட்ரம்பின் இந்த அணு குண்டு பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ள ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம்,

  • "அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு நாகரிகமோ, வரலாறோ, முறையான கண்ணியமோ கிடையாது. அதனால்தான் இறுதிச்சடங்கு போன்ற ஒரு நிகழ்வை வைத்து இப்படிப் பேசுகிறார். இத்தகைய உன்னதமான விஷயங்கள் உங்களைப் போன்றவர்களுக்குப் புரியாது"

என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.


டொனால்டு ட்ரம்ப் சர்ச்சை பேச்சு ஈரான் (Donald Trump controversial statement Iran Ayatollah Ali Khamenei funeral bombed US Iran talks 2026)


No comments

Thank you for your comments