Breaking News

உடைந்தது திமுக கூட்டணி.. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு! - ஆனால் வைத்த 5 அதிரடி நிபந்தனைகள்!

 


தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சரிவைச் சந்திக்க, தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட 10 இடங்கள் குறைந்த நிலையில், இப்போது கை கோர்த்திருக்கிறது காங்கிரஸ்!  

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உடைந்ததா? காங்கிரஸின் நிபந்தனைகள் என்ன? விரிவாகப் பார்ப்போம்.


தேர்தல் முடிவுகளும் தற்போதைய சூழலும்:

234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில், ஆட்சி அமைக்க மேஜிக் நம்பர் 118. ஆனால் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஆட்சிக் கட்டிலில் அமர இன்னும் 10 இடங்கள் தேவை என்ற சூழலில், 88 தொகுதிகளில் வென்ற திமுக-வை ஓரங்கட்டிவிட்டு, த.வெ.க. பக்கம் சாய்ந்திருக்கிறது காங்கிரஸ். கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.

காங்கிரஸின் அந்த 'ஸ்ட்ரிக்ட்' நிபந்தனைகள்!

த.வெ.க. -விற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பது வெறும் வாய்மொழி ஆதரவு அல்ல; இதில் மிக முக்கியமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நிபந்தனை 1: வகுப்புவாத சக்திகளுக்கு நோ என்ட்ரி!

மிக முக்கியமான நிபந்தனையாக, இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் (Communal Forces) இந்தக் கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று காங்கிரஸ் கறாராகத் தெரிவித்துள்ளது. அதாவது, பாஜக அல்லது அதன் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் கட்சிகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

நிபந்தனை 2: தத்துவார்த்த அடித்தளம்!

தந்தை பெரியாரின் சமூக நீதி, அம்பேத்கரின் அரசியலமைப்பு லட்சியங்கள் மற்றும் காமராஜரின் பொற்கால ஆட்சி - இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டே அரசு அமைய வேண்டும்.

நிபந்தனை 3: அதிகாரப் பங்கீடு!

'முறையான பங்கீடு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு' (Shared Responsibility). இதன் மூலம் அமைச்சரவையில் காங்கிரஸிற்கு முக்கிய இடங்கள் ஒதுக்கப்படும் என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளது.

நீண்ட கால ஒப்பந்தம் - வெறும் மாநில ஆட்சி மட்டுமல்ல!

இந்த அறிக்கை ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்கிறது. இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தற்காலிக ஒப்பந்தம் அல்ல. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அடுத்தடுத்த தசாப்தங்களுக்கு இந்த 'த.வெ.க. - காங்கிரஸ்' கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக உடனான பல ஆண்டுகால உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டதாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.

ராகுல் காந்தி - விஜய்: புதிய அச்சு!

தமிழக மக்களின் தீர்ப்பை, குறிப்பாக இளைஞர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய ராகுல் காந்தியும், விஜய்யும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கு ஆட்சியை வழங்கப்போவதாக இருவரும் களம் கண்டுள்ளனர்.

 உதயசூரியனின் கோட்டையில் புதிய 'வெற்றி'க் கொடியை ஏற்றி வைத்திருக்கிறது த.வெ.க. காங்கிரஸின் இந்த ஆதரவு தமிழக அரசியலில் ஒரு புதிய துருவத்தை உருவாக்கியிருக்கிறது. விஜய்யின் முதல் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது? திமுக-வின் அடுத்த கட்ட நகர்வு என்ன?  என்று எதிர்ப்பார்த்த நிலையில்...

 த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது என காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு, திமுகவின் முதுகில் குத்தும் செயல் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்துள்ளார்.

No comments

Thank you for your comments