Breaking News

தமிழகப் புதிய அமைச்சரவை: 9 அமைச்சர்களின் முழுமையான பின்னணி மற்றும் அரசியல் பயணம் - ஒரு பார்வை!


சென்னை | மே 19, 2026

தமிழகத்தில் திரு. விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 9 அமைச்சர்களின் தகுதி மற்றும் அவர்கள் கடந்து வந்த அரசியல் பாதையின் முக்கிய விவரங்கள்:

1. என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை

  • வயது & ஊர்: 61 வயது, காரைக்கால்.

  • கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு வரை.

  • அரசியல் பயணம்: 2006-இல் புதுச்சேரி புஸ்ஸி தொகுதியில் வென்று எம்.எல்.ஏ ஆனதால் 'புஸ்ஸி ஆனந்த்' என அழைக்கப்படுகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர். தமிழகத் தேர்தலுக்காகத் தனது வாக்கை இங்குக் கொண்டு வந்து, சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். புதுச்சேரி மற்றும் தமிழகம் என இரு மாநிலங்களிலும் எம்.எல்.ஏ-வான பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

2. ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை

  • வயது & ஊர்: 43 வயது, பூர்வீகம் திருச்சி.

  • கல்வித் தகுதி: இளநிலை (அரசியல் அறிவியல்), சென்னை கிறிஸ்தவக் கல்லூரி.

  • அரசியல் பயணம்: லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான இவர், 2016-இல் திமுகவில் இணைந்து, 2021 வரை பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர், தற்போது த.வெ.க-வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ளார். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வென்று அமைச்சராகியுள்ளார். இவர் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத் தலைவராகவும் உள்ளார்.

3. மருத்துவர் அருண்ராஜ் - கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர்

  • வயது & ஊர்: 46 வயது, நாமக்கல் குமாரமங்கலம்.

  • கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் (MGR மருத்துவப் பல்கலைக்கழகம் - 2002).

  • அரசியல் பயணம்: முன்னாள் ஐஆர்எஸ் (IRS) அதிகாரியான இவர், 2009 முதல் வருமானவரித் துறையில் பணியாற்றினார். (2020-இல் விஜய் வீட்டில் நடந்த சோதனையில் இவர் தலைமையிலான குழு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது). 2025 மே மாதம் விருப்ப ஓய்வு பெற்று த.வெ.க-வில் இணைந்தார். தற்போது கட்சியின் முக்கிய நிர்வாக மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் உள்ளார்.

4. கே.ஏ. செங்கோட்டையன் - நிதி மற்றும் ஓய்வூதியத் துறை

  • வயது & ஊர்: 77 வயது, ஈரோடு கோபிச்செட்டிபாளையம்.

  • கல்வித் தகுதி: நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர்.

  • அரசியல் பயணம்: 1972-இல் அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பயணித்தவர். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 9 முறை எம்.டி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் போட்டியிட்டு வென்றவர். போக்குவரத்து மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்து, மீண்டும் கோபி தொகுதியில் வென்று தற்போதைய அமைச்சரவையின் மூத்த முகமாகத் திகழ்கிறார்.

5. வெங்கட்ரமணன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

  • படிப்பு & தகுதி: எம்பிஏ மற்றும் சட்டப்படிப்பு (வழக்கறிஞர்).

  • அரசியல் பயணம்: முதலமைச்சர் விஜய்யின் நீண்ட கால நண்பரான இவர், தற்போது த.வெ.க-வின் தலைமை நிலையப் பொருளாளராக உள்ளார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6. சிடிஆர் நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத் துறை

  • ஊர் & படிப்பு: பூர்வீகம் உசிலம்பட்டி. பொறியியல் பட்டதாரி, சட்டம் மற்றும் குற்றவியல் நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம்.

  • அரசியல் பயணம்: ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் நீண்ட காலம் பயணித்து, பாஜாக மாநிலப் பொறுப்பில் இருந்தார். பின்னர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகி, 2023-இல் அதிமுக ஐடி விங்கில் இணைந்தார். 2025-இல் அதிலிருந்தும் விலகி த.வெ.க-வில் இணைந்து, தற்போது மாநில இணைச்செயலாளராகவும், கட்சியின் முக்கியக் குரலாகவும் செயல்பட்டு வருகிறார்.

7. ராஜ்மோகன் - பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை

  • வயது & ஊர்: 39 வயது, சென்னை விருகம்பாக்கம்.

  • கல்வித் தகுதி: இதழியலில் இளநிலைப் பட்டம் (Visual Communication / Journalism).

  • அரசியல் பயணம்: விஜய் டிவியின் 'தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு' மூலம் அறிமுகமாகி, யூடியூப் ஊடகவியலாளர், பட்டிமன்றப் பேச்சாளர், இயக்குநர் ('பாபா பிளாக் ஷீப்') எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கியவர். த.வெ.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு, சென்னை எழும்பூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு வென்று, தற்போது பள்ளிக்கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

8. மருத்துவர் டி.கே. பிரபு - சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை

  • பின்னணி: காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் மருத்துவர்.

  • அரசியல் பயணம்: தமிழகக் காங்கிரஸ் கட்சியின் ஐடி (IT) அணியில் தீவிரமாக இயங்கி வந்தவர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். த.வெ.க தொடங்கப்பட்ட பின் அதில் இணைந்து, காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்துப் போட்டியிட்டு அதிரடி வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார்.

9. கீர்த்தனா - தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை

  • வயது & படிப்பு: 29 வயது (அமைச்சரவையின் மிக இளம் அமைச்சர்), எம்.எஸ்சி (M.Sc) பட்டதாரி.

  • அரசியல் பயணம்: பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' (I-PAC) நிறுவனத்தில் இணைந்து தமிழகம் மற்றும் ஆந்திரத் தேர்தல்களில் வியூக வகுப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் திமுகவின் 'பென்' (PEN) நிறுவனத்தில் பணியாற்றினார். 2025-இல் விருதுநகரில் சுயேச்சையாகக் களம் காணத் திட்டமிட்டிருந்தவர், கடந்த மார்ச் 28-இல் த.வெ.க-வில் இணைந்தார். சேர்ந்த மறுநாளே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தற்போது தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

No comments

Thank you for your comments