Breaking News

தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்: 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் - அரசு உத்தரவு!

 சென்னை | மே 29, 2026

தமிழகத்தில் நிர்வாக நலன் மற்றும் அரசுப் பணிகளை மேலும் சுறுசுறுப்பாக்கும் நோக்கில், ஒரே நேரத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின்படி, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்கள் உட்பட மொத்தம் 14 மாவட்டங்களுக்குப் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் (District Collectors) நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கியத் துறை அதிகாரிகளின் முழு விபரம் பின்வருமாறு:

14 மாவட்டங்களின் புதிய ஆட்சித்தலைவர்கள் விபரம்:

  • வேலூர் மாவட்ட ஆட்சியர்: திருமதி. லீலா அலெக்ஸ்

N.பிரியா ஐஏஎஸ்
  • ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்: திருமதி. பிரியா
  • செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்: திரு. வீரப்பன்
வந்தனா கார்க் ஐஏஎஸ்
  • திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்: செல்வி. வந்தனா
  • கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்: திருமதி. பத்மஜா
  • நாமக்கல் மாவட்ட ஆட்சியர்: திரு. மதுபாலன்
  • திருச்சி மாவட்ட ஆட்சியர்: திரு. பிரதீப் தயாள்
  • தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்: திருமதி. ரேவதி
  • நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்: திரு. பிரவீன் குமார்
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர்: திரு. சரவணன்
  • தேனி மாவட்ட ஆட்சியர்: திரு. ஆர். வைத்தியநாதன்
  • மதுரை மாவட்ட ஆட்சியர்: திரு. ஆகாஷ்
  • திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்: திரு. ஆனந்த்மோகன்
  • கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்: திரு. பிரதாப்


முக்கியத் துறை புதிய செயலர்கள் மற்றும் இயக்குநர்கள்:

மாவட்ட ஆட்சியர்கள் தவிர, மாநில அளவிலான பல்வேறு முக்கியக் கழகங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

  • பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலர்: திருமதி. சுந்தரவல்லி
  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளர்: திருமதி. பூஜா குல்கர்னி
  • தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநர்: திரு. ஸ்ரீதர்
  • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர்: திருமதி. சஜீவனா

தமிழகக் காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்ட அதே நாளில், இந்த பிரம்மாண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்ற உத்தரவும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய அதிகாரிகள் அனைவரும் விரைவில் தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவுள்ளனர்.

 

No comments

Thank you for your comments