Breaking News

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை: 84 நாட்களில் ரூ.83.89 லட்சம் வசூல்!

 காஞ்சிபுரம் | மே 14, 2026

மகா சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் வியாழக்கிழமை அன்று திறந்து எண்ணப்பட்டன.

காணிக்கை விவரங்கள்:

சுமார் 84 நாட்களுக்குப் பிறகு கோயிலில் இருந்த 3 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் வசூலான காணிக்கை விவரங்கள் வருமாறு:

  • ரொக்கப் பணம்: ரூ. 83,89,384.
  • தங்கம்: 164 கிராம்.
  • வெள்ளி: 852 கிராம்.

பணியில் ஈடுபட்டோர்:

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில்:

  • கோயில் ஸ்ரீ காரியம் ந. சுந்தரேச ஐயர்.
  • கோயில் உதவி ஆணையர் ஆர். ராஜலட்சுமி.
  • மணியக்காரர் சூரியநாராயணன். ஆகியோர் உடனிருந்து பணிகளைக் கண்காணித்தனர். பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட மொத்தத் தொகையும் வங்கி வைப்பு நிதியில் வரவு வைக்கப்பட்டது.



No comments

Thank you for your comments