Breaking News

"விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்!" - செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் உடைந்து பேசிய நடிகர் ரவி மோகன்!

 சென்னை | மே 16, 2026

23 ஆண்டுகாலத் திரையுலக வாழ்க்கையில் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல நடிகர் ரவி மோகன், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் துயரங்கள் குறித்துப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.


பிள்ளைகளைப் பார்க்க அனுமதி மறுப்பு:

"குழந்தைகளுக்காக 14 வருடங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் கல்விக்கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கிறேன். ஆனால், இப்போது என் பிள்ளைகளைப் பார்க்க எனக்கு அனுமதி மறுக்கிறார்கள். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும்" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.

சினிமாவிலிருந்து தற்காலிக விலகல்:

தனது அநீதிக்கு எதிரான மனக்குமுறலை வெளியிட்ட அவர், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:

  • நடிப்பு நிறுத்தம்: எனக்கு முறைப்படி விவாகரத்து கிடைக்கும் வரை இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் இப்போது நடிக்க முடியவில்லை.
  • படங்கள் ரிலீஸ் தற்காலிகத் தடை: விவாகரத்து நடைமுறைகள் முடியும் வரை எனது படங்கள் எதுவும் வெளியாகாது.


கெனிஷா மற்றும் அவதூறு குறித்த விளக்கம்:

தன்னைப் பற்றிச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அவர் பதிலளித்தார்:

  • "நான் பார்க்காத பெண்களா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். எனக்குக் கஷ்டம் வந்தபோது என்னுடன் நின்ற பெண் தான் கெனிஷா. என்னை அவர் புரிந்து கொண்டார். ஆனால், திட்டமிட்டு சைபர் புல்லியிங் செய்து அவரைத் துரத்திவிட்டார்கள்."
  • "அவர்களுக்குக் கோடிக்கணக்கான மதிப்பில் வீடு கட்டிக் கொடுத்தேன். இப்போது நான் வாடகை வீட்டில் தான் உள்ளேன். வீட்டில் நிம்மதியும் மரியாதையும் இல்லாததால் தான் அங்கிருந்து வெளியே வந்தேன்."


மந்திரவாதம் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள்:

பேட்டியின் இறுதிப் பகுதியில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ரவி மோகன், அதிர்ச்சிகரமான சில புகார்களை முன்வைத்தார்:

  • மூன்றெழுத்து நடிகை மீது புகார்: "ஒரு மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையைக் கெடுக்கும் வேலைகளைச் செய்து வருகிறார். எனக்குச் செய்வினை (மந்திரவாதம்) செய்துள்ளனர். இதனால் தற்போது எனக்கு ரத்த வாந்தி வருகிறது."
  • மன உளைச்சல்: "என் குழந்தைகளைப் பார்க்க விடாததால் ஏற்பட்ட ஏக்கத்தில், என் கைகளை அறுத்துக்கொண்டு என்னை நானே துன்புறுத்திக் கொள்கிறேன். அவர்கள் என்னை உயிரோடு இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். ஆனால், இந்தத் தனிப்பட்ட பிரச்சினைகளை முடித்துக்கொண்டு நான் மீண்டும் வலுவாகத் திரும்புவேன்" என்று ஆவேசமாகப் பேசினார்.

23 ஆண்டுகள் எந்தவொரு கரும்புள்ளியும் இல்லாமல் சினிமாவில் பயணித்த ஒரு முன்னணி நடிகர், இத்தனை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிப் பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


No comments

Thank you for your comments