"விஜய் சாதிச்சது MGR, NTR-ஐ விடப் பெருசு!"; ஸ்டாலினைச் சந்தித்ததில் அரசியலில்லை - போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் அதிரடிப் பேச்சு!
சென்னை | மே 17, 2026
மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து விளக்கம்:
தேர்தல் முடிவுகள் வெளியானதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் சந்தித்தது பெரும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அது குறித்துப் பேசிய அவர்:
- "ஸ்டாலின் சாருக்கும் எனக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது, அது நீண்ட கால நட்பு.
- ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் சார் தோல்வியடைந்தது எனக்குச் சங்கடமாக இருந்தது. அதனால்தான் நண்பராக அவரைச் சென்று பார்த்தேன்.
- விஜய் முதலமைச்சர் ஆவதைத் தடுக்க இரு கட்சிகளும் இணைய வேண்டும் என நான் அங்கு பேச வந்ததாகச் சொல்வதெல்லாம் தவறு. அந்தச் சூழலில் அப்படிப் பேச முடியாது. அவ்வளவு தரம் தாழ்ந்து பேசக்கூடிய நபர் ரஜினிகாந்த் அல்ல."
விஜய் மீது பொறாமையா? ரஜினி ஆவேசம்:
புதிய முதலமைச்சர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும், அவர் மீது பொறாமை என்றும் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்:
- "விஜய் வென்றதும் எனது 'X' (ட்விட்டர்) பக்கத்தில் வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தேன். சமீபத்தில் விமான நிலையத்தில் ஒருவர் போனுடன் வந்து 'விஜய் முதல்வர் ஆகியுள்ளார்' என்றபோது நான் சிரித்துக்கொண்டே சென்றதை வைத்து வாழ்த்து கூறவில்லை என்கிறார்கள்.
- நான் அரசியலிலேயே இல்லை, எனக்கு ஏன் அவர் மீது பொறாமை வரப்போகிறது? எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளியே உள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவது இருவருக்குமே நல்லது இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே அவரை நான் பார்த்து வருகிறேன்."
"எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் சாதனையை விடப் பெரியது" - விஜய்க்குப் பாராட்டு:
விஜய்யின் அரசியல் வெற்றியைப் பாராட்டிப் பேசிய ரஜினிகாந்த், அவரது சாதனை அசாத்தியமானது எனக் குறிப்பிட்டார்:
- "இளம் வயதிலேயே அவர் முதலமைச்சராகியுள்ளார். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் செய்த சாதனைகளை விட விஜய்யின் சாதனை பெரியது. தனியொரு ஆளாகப் பெரிய கட்சிகளுக்கு எதிராக நின்று அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். சினிமாத்துறையிலிருந்து வந்து அவர் சாதித்திருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
- மக்கள் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ளனர். அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு."
தொண்டர்களுக்கும் விஜய்க்கும் ரஜினியின் அட்வைஸ்:
- "சினிமாவில் இழப்பு ஏற்பட்டால் அது தயாரிப்பாளரை மட்டும்தான் பாதிக்கும். ஆனால் அரசியல் பொறுப்பு என்பது மிகப்ப பெரியது. மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற விஜய்க்கு இன்னும் இரண்டு ஆண்டுகளாவது அவகாசம் கொடுக்க வேண்டும்.
- விஜய்யின் தொண்டர்கள் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். ஏனெனில் தொண்டர்கள் செய்யும் தவறு விஜய்யைத்தான் பாதிக்கும். 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் சினிமா புகழ், இளைஞர்கள், மகளிர் சக்தி மூலம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று ரஜினிகாந்த் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments