Breaking News

காஞ்சியில் நாளை வாக்குப்பதிவு: 1,556 மையங்களில் 12 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தயார் - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!


 காஞ்சிபுரம் | ஏப்ரல் 22, 2026

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகள் மற்றும் இயந்திரங்கள்:

மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,556 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தடையின்றி வாக்குப்பதிவு நடைபெற 5,738 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

  • ஆலந்தூர்: 431 மையங்கள்
  • ஸ்ரீபெரும்புதூர்: 446 மையங்கள்
  • உத்திரமேரூர்: 321 மையங்கள்
  • காஞ்சிபுரம்: 358 மையங்கள்

வாக்காளர் மற்றும் அலுவலர்கள் விபரம்:

மாவட்டத்தில் மொத்தம் 12,07,757 வாக்காளர்கள்  தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனர். இவர்களுக்காக 7,468 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 123 மையங்கள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள்:

தேர்தல் ஆணையம் பல்வேறு தரப்பினரையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு மையங்களை அமைத்துள்ளது:

  • மாதிரி மையங்கள்: ஆலந்தூர் (ஏ.ஜே.எஸ்.நிதி பள்ளி), ஸ்ரீபெரும்புதூர் (குணகரம்பாக்கம் பள்ளி), உத்திரமேரூர் (அஞ்சூர் பள்ளி), காஞ்சிபுரம் (வெங்கடாபுரம் பள்ளி).
  • பெண்களால் நிர்வகிக்கப்படும் மையங்கள்: செவிலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி (காஞ்சிபுரம்), டி.ஏ.வி. பள்ளி (ஆலந்தூர்) உட்பட 4 இடங்கள்.
  • மாற்றுத்திறனாளிகள் மையம்: ஏகாம்பரநாதர் வடக்கு மாட வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி.
  • இளைஞர்கள் நிர்வகிக்கும் மையம்: காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளி.

களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்:

மாவட்டம் முழுவதும் மொத்தம் 65 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்:

  • காஞ்சிபுரம்: வீ. சோமசுந்தரம் (அதிமுக), நித்யா சுகுமார் (திமுக), ஆர்.வி. ரஞ்சித்குமார் (தவெக), வெற்றிச்செல்வி (நாதக).
  • உத்திரமேரூர்: க. சுந்தர் (திமுக), பெ. மகேஷ்குமார் (பாமக), முனிரெத்தினம் (தவெக), மரம். மாசிலாமணி (நாதக).
  • ஆலந்தூர்: தா.மோ. அன்பரசன் (திமுக), எஸ். சரவணன் (அதிமுக), மகாலட்சுமி (நாதக).
  • ஸ்ரீபெரும்புதூர்: கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), பழனி (அதிமுக), தென்னரசு (தவெக), சிந்து (நாதக).

No comments

Thank you for your comments