காஞ்சிபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: அரசியல் கட்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எழுச்சிமிகு மரியாதை!
காஞ்சிபுரம் | ஏப்ரல் 14 2026
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், காஞ்சிபுரம் ரயில்வே ரோடு மற்றும் ஓரிக்கை பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாவட்டச் செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
- இதில் காஞ்சிபுரம் எம்பி க. செல்வம், திமுக வேட்பாளர் நித்யா சுகுமார், மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக மரியாதை:
அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான வி. சோமசுந்தரம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி:
விசிக சார்பில் மாவட்டச் செயலாளர் விப்பேடு அருள்நாதன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற கட்சிகள்:
- தவெக சார்பில் மாவட்டச் செயலாளர் வளையாபதி மற்றும் காஞ்சிபுரம் வேட்பாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் ஆகியோர் தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI & CPM), திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் தங்களது கட்சி சார்பில் மரியாதை செலுத்தினர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) பா. முருகேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச. ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments