Breaking News

தேசிய கராத்தே போட்டியில் தங்கம்: காஞ்சி சங்கரா பல்கலைக்கழக மாணவர் தாஸ்பிரகாஷ் சாதனை!

 காஞ்சிபுரம் | ஏப்ரல் 27, 2026

அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில், காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக மாணவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளது பல்கலைக்கழகத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.


போட்டி விபரங்கள்:

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகட் பல்கலைக்கழகத்தில் (Dibrugarh University) அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

தங்கப்பதக்கம் வென்ற மாணவர்:

இப்போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தின் சார்பில் பங்கேற்ற மாணவர் த. தாஸ்பிரகாஷ், தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைக் கைபற்றினார்.

பல்கலைக்கழக நிர்வாகம் பாராட்டு:

தங்கப்பதக்கம் வென்று பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிய மாணவர் தாஸ்பிரகாஷை, இன்று (திங்கள்கிழமை) பல்கலைக்கழக நிர்வாகிகள் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்:

  • துணைவேந்தர்: முனைவர் ஸ்ரீநிவாசு
  • சார்பு துணைவேந்தர்: வசந்த் குமார் மேத்தா
  • பதிவாளர்: ஸ்ரீராம்
  • புலத்தலைவர்: வெங்கட்ராமன்
  • உடற்கல்வி இயக்குநர்: குணாளன்

மாணவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி, பல்கலைக்கழகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் மாணவர்கள் இது போன்ற தேசிய அளவிலான சாதனைகளைத் தொடர்ந்து படைக்கப் பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments