வெற்றிவேல் முருகனிடம் விஸ்வரூப தரிசனம்: 'மே 4' பிளான் மற்றும் வேட்பாளர்களுடன் ரகசிய மீட்டிங் - விஜய் அதிரடி!
திருச்செந்தூர் | ஏப்ரல் 28, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் அவர்கள் இன்று அதிகாலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திடீர் தரிசனம் மேற்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் விசிட்: பின்னணியில் ஜோதிட அறிவுரை?
எதிரிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படவும், வெற்றிக்கான தடைகள் விலகவும் திருச்செந்தூர் முருகனை 'விஸ்வரூப தரிசனம்' செய்யுமாறு விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்காக நள்ளிரவு 2 மணிக்குத் தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த விஜய், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் திருச்செந்தூர் சென்றார். அதிகாலை பூஜையில் கலந்துகொண்டு முருகனை வழிபட்டவர், செண்டிமெண்ட்டாக சில மணிநேரம் அங்கேயே தங்கிவிட்டு சென்னை திரும்பினார்.

வெற்றித் தலம் திருச்செந்தூர்:
ஆன்மீக ரீதியாக திருச்செந்தூர் என்பது 'வெற்றிக்குரிய தலம்' (சத்ரு சம்ஹார தலம்) எனக் கருதப்படுகிறது. அசுரர்களை வதம் செய்து முருகன் வெற்றி வாகை சூடிய இந்தத் தலத்தில் தரிசனம் செய்வது, அரசியல் களத்தில் இருக்கும் தடைகளை உடைக்கும் என்பது த.வெ.க. நிர்வாகிகளின் நம்பிக்கையாக உள்ளது.
வியூகப்புள்ளி கொடுத்த பாசிட்டிவ் ரிப்போர்ட்:
வாக்குப்பதிவு நிலவரங்களை ஆய்வு செய்த தேர்தல் வியூகப் புள்ளி, விஜய்க்கு மிகவும் சாதகமான ரிப்போர்ட் ஒன்றை அளித்துள்ளாராம்.
- "த.வெ.க முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அல்லது தவெக ஆதரவு இல்லாமல் இங்கே யாரும் ஆட்சி அமைக்க முடியாது" என்கிற அளவுக்கு ரிப்போர்ட் பாசிட்டிவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
- இதனால் விஜய் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும், அடுத்தகட்ட ஆன்மீகப் பயணமாக மேலும் சில முக்கியத் தலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.
வேட்பாளர்களுடன் முக்கிய மீட்டிங்:
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , வெற்றி பெறும் வேட்பாளர்களை மற்ற கட்சிகள் இழுக்க முயற்சி செய்யலாம் என்பதால், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை பனையூரில் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில், வாக்கு எண்ணிக்கை நாளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் ரிசல்ட்டுக்குப் பிறகு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விஜய் ஆலோசிக்க உள்ளார்.
நிர்வாகிகள் அப்செட்?
விஜய்யின் இந்த ரகசியப் பயணத்தின் போது உள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் யாரும் வரக்கூடாது எனக் கண்டிப்பாக கூறியிருக்கிறார் புஸ்சி ஆனந்த். ஆனால், கோவிலுக்குள் விஜய் செல்கையில் புஸ்சி ஆனந்துக்கு நெருக்கமான மா.செக்கள் சிலர் உடனிருந்ததால் மற்ற நிர்வாகிகளெல்லாம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. "தலைவர் நம்ம ஊருக்கு வரும்போது கூட அவரைச் சந்திக்க முடியவில்லையே" என அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


No comments
Thank you for your comments