"5 தலைநகரங்கள்.. அரசுப் பள்ளியில் தான் படிக்கணும்!" - சீமானின் 462 பக்க 'புரட்சிகர' தேர்தல் அறிக்கை வெளியீடு!
சென்னை | மார்ச்19, 2026
ஐந்து தலைநகரங்கள் திட்டம்:
தமிழகத்தின் வளர்ச்சியைப் பரவலாக்க ஐந்து நகரங்களை வெவ்வேறு தலைநகரங்களாகச் சீமான் அறிவித்துள்ளார்:
- திருச்சி: நிர்வாகத் தலைநகரம் (தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் அலுவலகம் இங்கு மாற்றப்படும்).
- சென்னை: தொழில்நுட்பத் தலைநகரம்.
- கோயம்புத்தூர்: தொழில் மற்றும் வணிகத் தலைநகரம்.
- மதுரை: மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரம்.
- கன்னியாகுமரி: தமிழர் மெய்யியல் தலைநகரம்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு:
- அரசுப் பள்ளி கட்டாயம்: முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் கட்டாயம் அரசுப் பள்ளிகளில் தான் பயில வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்படும்.
- தமிழ் கட்டாயம்: தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை என்ற நிலை உருவாக்கப்படும்.
- கல்விக் கடன் ரத்து: மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
- அரசுப் பணி: ஆடு, மாடு வளர்ப்பது அரசுப் பணியாக மாற்றப்படும். படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை உறுதி செய்யப்படும்.
சமூக நீதி மற்றும் பெண்கள் நலன்:
- மகளிர் உரிமை: அரசுத் துறைகளில் பெண்களுக்கு 50% (சரிபாதி) இடஒதுக்கீடு வழங்கப்படும். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்குத் தனித் தொகுதிகள் பெறப் போராடுவோம்.
- மாற்றுத்திறனாளிகள்: இவர்களுக்கெனத் தனி அமைச்சகம் மற்றும் தனி அமைச்சர் உருவாக்கப்படும். உள்ளாட்சிப் பதவிகளில் 5% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- இடஒதுக்கீடு: ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டைத் தவிர்த்து, தமிழ் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம்:
- மதுவிலக்கு: ஓராண்டுக்குள் படிப்படியாக மதுக்கடைகள் முழுமையாக மூடப்படும்.
- இலவசக் குடிநீர்: குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு, அனைவருக்கும் தரமான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். ஆற்று நீரைப் பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்குத் தடை விதிக்கப்படும்.
- விவசாயிகள் ஓய்வூதியம்: 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படும்.
- மணல் கொள்ளை தடுப்பு: மணல் கொள்ளை தடுக்கப்பட்டு, புதிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் உருவாக்கப்படும்.
இதர முக்கிய வாக்குறுதிகள்:
- வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அஞ்சல் வழி வாக்குரிமை பெற்றுத் தரப்படும்.
- தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படும்.
- மக்கள் தேடி அரசு ஊழியர்களே வந்து சேவை வழங்கும் முறை அமல்படுத்தப்படும்.
- அனைவருக்கும் சமமான, தரமான கட்டணமில்லா மருத்துவம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
No comments
Thank you for your comments