காஞ்சிபுரத்தில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: வங்கிக் கணக்குகளில் அதிக பணப்பரிமாற்றம் செய்தால் கண்காணிப்பு – ஆட்சியர் எச்சரிக்கை!
காஞ்சிபுரம் | மார்ச் 18, 2026
ஆட்சியர் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
1. வங்கிக் கணக்குகள் கண்காணிப்பு:
இத்தகைய அசாதாரணப் பணப் பரிமாற்றங்கள் குறித்து வங்கி அலுவலர்கள் உடனடியாக மாவட்டத் தேர்தல் அலுவலருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
2. ஏடிஎம் மற்றும் அடகு கடைகள்:
வங்கி ஏடிஎம் மையங்களுக்குப் பணம் கொண்டு செல்லும் வாகனங்களில், வங்கி அலுவலர்கள் உரிய ஆவணங்களை வைத்திருப்பதைச் சம்பந்தப்பட்ட வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
3. தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள்:
தங்கும் விடுதிகளில் (Lodges/Hotels) தங்குபவர்களிடம் கண்டிப்பாகப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பெற்ற பின்னரே அனுமதி அளிக்க வேண்டும்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்:
மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அச்சக உரிமையாளர்கள், உணவக மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்துத் தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
No comments
Thank you for your comments