ஜூலி vs தவெக: இவர்தான் என் 3வது புருஷன்... "மடக்கு ஊதியை பார்த்து ஓட்டுப்போடுங்க!" - விஜய்யை மீண்டும் வம்புக்கு இழுத்த பிக் பாஸ் ஜூலி!
சென்னை, மார்ச் 3:
மோதலின் பின்னணி:
கடந்த வாரம் வேலூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசிய 'குட்டி கதை'யை கிண்டல் செய்து ஜூலி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "காளை மாடு கதையை கேட்டு ரசிகர்கள் விபரீத முடிவு எடுக்கப் போகிறார்கள்" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஜூலியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
"வல்கர் வாரியர்ஸ்" - ஜூலியின் பதிலடி:
விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த ஜூலி, தவெக தொண்டர்களை "வல்கர் வாரியர்ஸ்" (Vulgar Warriors) எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். "உங்க ரசிகர்கள் மண்டையில் மைனராக இருக்கிறார்கள்" என அவர் பேசியது தவெக ரசிகர்களை மேலும் கொதிப்படையச் செய்தது. ஜூலியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணங்கள் குறித்துப் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினர்.
மூன்றாவது திருமணம் குறித்த நக்கல்:
தற்போது வெளியிட்டிருக்கும் மூன்றாவது வீடியோவில், தனது திருமண வதந்திகளுக்கு ஜூலி நக்கலாகப் பதிலளித்துள்ளார்:
"ஹாய் வல்கர் வாரியர்ஸ்... இவர் தான் என் மூன்றாவது புருஷன், இவருக்கும் எனக்கும் இப்போது தான் முதன்முறையா திருமணம் நடந்தது. இதற்குமுன் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் கல்யாணம் நடந்தது. அதற்கு முன் அம்மன் தாய் படத்தில் கல்யாணம் நடந்தது. வல்கர் வாரியர்ஸ் சொல்வது போல இது எனக்கு 3வது திருமணம் தான்" என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
விஜய்க்கு நேரடி சவால்:
வீடியோவின் இறுதியில் விஜய்யின் அரசியல் வருகையை நேரடியாகத் தாக்கிப் பேசிய ஜூலி:
"முகத்தை பார்த்தாக்கூடவா தெரியாது, இதே போல, தேர்தல் நேரத்தில் வேறு எந்த சின்னத்திலாவது ஊதிவிட்டுவிட்டு வந்துவிடாதீர்கள், சரியாக 'மடக்கு ஊதி'யை பார்த்து ஓட்டுப்போடுங்கள். அப்புறம் உங்க தலைவர் டெபாசிட் கூட வாங்காமல் போய்விட போகிறார்" என விஜய்யை கடுமையாக கிண்டலடித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் தவெக தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், சின்னத்திரை பிரபலம் ஒருவருடன் ஏற்பட்டுள்ள இந்த 'இணையப் போர்' பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments