Breaking News

காஞ்சிபுரம்: சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு பதாகை வெளியீடு - மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்!


காஞ்சிபுரம், பிப். 9: 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், சைபர் குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பதாகையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வெளியிட்டார்.

நிதி சார் கல்வி விழிப்புணர்வு வாரம்:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி இணைந்து, பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை 'நிதி சார் கல்வி விழிப்புணர்வு வாரமாக' கொண்டாடுகின்றன. இதன் ஒரு பகுதியாக, "உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்" (KYC) என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இது குறித்து ஆட்சியர் பேசுகையில்:

"சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது."



மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்:

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 453 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணுமாறு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.


கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி:

இதனைத் தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, அதற்கான உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க, அரசு அலுவலர்கள் அனைவரும் அதனைப் பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர்.

பங்கேற்றவர்கள்:

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. ஆர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ச. ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏ. திலீப், நிதிசார் கல்வி மைய ஆலோசகர் என். அரங்கமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா. மலர்விழி மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Rasipalan

🌿 மீண்டும் காதல் | நீதிமன்றத்தில் போராடும் திருமண வாழ்க்கை

பேசாத மௌனம் பிரிவாக மாறுமா? | புரிதல் மீண்டும் காதலாக மாறுமா? | இன்றே பாருங்கள் ⚡

🛒 மீண்டும் காதல் 👇

 


No comments

Thank you for your comments