காஞ்சிபுரம்: கருணை அடிப்படையில் பணி நியமனம் - 112 முஸ்லீம் மகளிர்க்கு ரூ.20.15 லட்சம் கடனுதவி!
காஞ்சிபுரம், பிப். 16:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கருணை அடிப்படையில் இருவருக்குப் பணி நியமன ஆணைகளையும், 112 பேருக்குக் கடனுதவிகளையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்:
ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப. முருகேசன் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 515 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
பணி நியமனம் மற்றும் கடனுதவி:
கூட்டத்தின் நிறைவாக, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன:
கருணை அடிப்படைப் பணி: * பா. ஜெயந்தி - ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சமையலர் பணி. **
சிவமதி - ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளர் பணி. ஆகியோருக்கு இதற்கான அரசாணைகளை ஆட்சியர் வழங்கினார்.
🌿 எந்தப் பரிகாரமும் பலன் தரவில்லையா?
உங்கள் தலையெழுத்தே மாறும் மகா ரகசியம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
- முஸ்லீம் மகளிர் நலன்: தொழில் தொடங்குவதற்காக 112 முஸ்லீம் மகளிர்க்கு ரூ. 20.15 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments