Breaking News

நேர்மையின் சிகரம்: கீழே கிடந்த தங்கத்தாலியை ஒப்படைத்த மருத்துவமனை ஊழியர் - உரியவரிடம் சேர்த்த பெண் காவலருக்குக் குவியும் பாராட்டு!


 காஞ்சிபுரம் | பிப்ரவரி 12, 2026

"நேர்மை இன்னும் சாகவில்லை" என்பதை மெய்ப்பிக்கும் வகையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தவறவிட்ட தங்கத்தாலியை மீட்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த ஊழியர் மற்றும் பெண் காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நிகழ்வின் பின்னணி:

நேற்று (11.02.2026), காஞ்சிபுரம் ஒளி முகமது பேட்டையைச் சேர்ந்த பிரியா என்பவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது தங்கத்தாலி கீழே விழுந்து காணாமல் போனது.

கண்டெடுத்த ஊழியர்:

மருத்துவமனையில் பணியாற்றும் ரயில்வே ரோடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாரதி (த/பெ ஆதி) என்பவர், கீழே கிடந்த அந்தத் தங்கத்தாலியைக் கண்டெடுத்தார். பேராசை கொள்ளாமல், அதனை உடனடியாக மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த விஷ்ணு காஞ்சி காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி முருகேஸ்வரிடம் (எண்: 1244) ஒப்படைத்தார்.


1 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்! 🙏சனி மகாபிரதோஷம் வழிபாட்டு முறைகள்! | Feb. 14

உரியவரிடம் ஒப்படைப்பு:

பெண் தலைமை காவலர் முருகேஸ்வரி, துரிதமாகச் செயல்பட்டு நகையைத் தவறவிட்ட பிரியாவைத் தொடர்பு கொண்டு வரவழைத்தார். உரிய விசாரணைக்குப் பின், நகை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.




காவல் ஆய்வாளர் பாராட்டு:

பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நிலையிலும், கண்டெடுத்த நகையை நேர்மையுடன் ஒப்படைத்த ஊழியர் பாரதி மற்றும் அதனை உரியவரிடம் சேர்த்த பெண் தலைமை காவலர் முருகேஸ்வரி ஆகியோரின் மனிதாபிமானத்தைப் பாராட்டி, விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்கள் இருவருக்கும் வெகுமதி வழங்கிச் சிறப்பித்தார்.

பொதுமக்கள் மத்தியில் இந்த நேர்மையான செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

No comments

Thank you for your comments