Breaking News

விருத்தாசலத்தில் காங்கிரஸ் மெகா உண்ணாவிரதம்! "100 நாள் வேலைத் திட்டத்தைச் சீர்குலைக்காதே" - மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கம்.

 

விருத்தாசலம் :

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் இன்று பிரம்மாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.



தலைமை: 

கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

போராட்டத்தின் முக்கியக் காரணங்கள்: 

உண்ணாவிரதத்தின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்:

  • பெயர் மாற்றம் மற்றும் குழப்பம்: மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி, 100 நாள் வேலையை 125 நாள் வேலை என அறிவித்து இத்திட்டத்தையே மத்திய அரசு சீர்குலையச் செய்துள்ளது.
  • செயலிழக்கும் திட்டம்: பிரதமர் மோடி இச்சட்டத்தையே மாற்றித் திட்டமாக அறிவித்துள்ளதால், இது காலப்போக்கில் முழுமையாகச் செயலிழந்து போகும் அபாயம் உள்ளது.
  • ஊதிய நிலுவை: 125 நாள் வேலை என விளம்பரம் செய்கிறார்களே தவிர, ஏற்கனவே 40 நாட்கள் வேலை செய்தவர்களுக்குக் கூட இதுவரை உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.

கூடாரவல்லி ரகசியம் | சுக்கிர தோஷம் நீங்கும்…
ஆண்டாள் கேட்ட அக்காராடிசில்! |  @K24AstroTv 

நிர்வாகிகள் பங்கேற்பு: 

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

   செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.

 

2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?

| 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 



@K24AstroTv 









No comments

Thank you for your comments