Breaking News

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: விருத்தாசலத்தில் கோட்டாட்சியர் துவக்கி வைத்த பிரம்மாண்ட பேரணி!




விருத்தாசலம் | ஜனவரி 30, 2026

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருத்தாசலத்தில் இன்று நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


பேரணி துவக்கம்:

விருத்தாசலம் பாலக்கரை அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்வை, கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள், விருத்தாம்பிகை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


முக்கிய விழிப்புணர்வு முழக்கங்கள்:

பாலக்கரையில் தொடங்கி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் வரை நடைபெற்ற இந்தப் பேரணியில், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் பின்வரும் விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டுச் சென்றனர்:

  • "ஹெல்மெட் அணிவோம் - உயிர் காப்போம்"
  • வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிர்க்கவும்.
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது.
  • பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.
  • இருசக்கர வாகனங்களில் அதிவேகப் பயணம் மற்றும் சாகசங்களைத் தவிர்க்கவும்.

துண்டுப் பிரசுரம் விநியோகம்:

பேரணியின் இடையே, ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் சாலையோரக் கடை உரிமையாளர்களுக்குச் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அதிகாரிகள் வழங்கினர். விபத்தில்லா விருத்தாசலத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பங்கேற்ற அதிகாரிகள்:

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் விருத்தாசலம் மோட்டார் வாகன வட்டார ஆய்வாளர் பெரியசாமி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், சுரேஷ், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.






No comments

Thank you for your comments