காஞ்சிபுரம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் 77-வது குடியரசு தின விழா: தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கிய எழிலரசன் எம்.எல்.ஏ!
காஞ்சிபுரம் :
தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு:
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ-வும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமை தாங்கினார். அவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி குடியரசு தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்:
இந்த விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்டப் பொருளாளர் 'சன் பிராண்ட்' ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் பி.எம். குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்துரு, மலர்க்கொடி தசரதன், ஒன்றியக் குழு உறுப்பினர் ராம்பிரசாத், பகுதிச் செயலாளர்கள் திலகர், வெங்கடேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் குடியரசு ரமேஷ்ஷா, பகவான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments