Breaking News

காஞ்சிபுரத்தில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணர்வு: தலைக்கவசம் அணியாதவர்களுக்கு MLA எழிலரசன் ஹெல்மெட் வழங்கினார்!

 
காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் 38-வது சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

தலைக்கவசம் வழங்கிய எம்.எல்.ஏ:

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களுக்கு இலவசமாகத் தலைக்கவசங்களை வழங்கினார். மேலும், "தலைக்கவசம் என்பது உங்கள் உயிர்க்கவசம்; சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பது விபத்துகளைத் தவிர்க்க உதவும்" என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.


கலைநிகழ்ச்சிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள்:

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 'புதிய புயல்' கலைக்குழுவினரின் சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் (தப்பாட்டம் மற்றும் நாடகம்) நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

பூக்கடைச்சத்திரம், சங்கரமடம், பேருந்து நிலையம், கச்சபேசுவரர் கோயில் உள்ளிட்ட நகரின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியப் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

முக்கியப் பங்கேற்பாளர்கள்:

இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) எஸ்.நாகராஜ் தலைமை வகித்தார். சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் (MVI) சிவராஜ் வரவேற்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கண்காணிப்பாளர்கள் கல்யாண சுந்தரம், தமிழ்ச்செல்வி, நேர்முக உதவியாளர் செல்வம் மற்றும் போக்குவரத்துத் துறைப் பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



No comments

Thank you for your comments