Breaking News

காஞ்சி மக்களுக்கு மெகா குட் நியூஸ்! பொன்னேரிக்கரையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.


 காஞ்சிபுரம் |  ஜனவரி 7, 2026 :

காஞ்சிபுரம் நகரின் தீராத போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்னேரிக்கரை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏன் புதிய பேருந்து நிலையம்? 

தற்போது காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள 7 ஏக்கர் பேருந்து நிலையம் 60 ஆண்டுகள் பழமையானது. தினசரி 350-க்கும் மேற்பட்ட பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்வதால், நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, புகழ்பெற்ற கோயில்களுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்.

வழக்கும் தீர்ப்பும்: 

புதிய பேருந்து நிலையத்திற்காகப் பொன்னேரிக்கரை பகுதியில் தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 19 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்தது. இதற்கு எதிராகத் தனியார் அறக்கட்டளை தொடர்ந்த வழக்குகளால் இத்திட்டம் முடங்கி இருந்தது. இன்று இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அரசு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில் விரைவாகப் புதிய பேருந்து நிலையத்தைக் கட்டுமாறு உத்தரவிட்டுள்ளது.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்: 

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் வந்திருந்த அமைச்சர் ஆர்.காந்தி, எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ-க்கள் க.சுந்தர், எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். சுமார் ₹40 கோடி மதிப்பீட்டில் இந்த நவீன பேருந்து நிலையம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments